ஆயுஷ் திறன் நிபுணர்களின் பட்டமளிப்பு விழாவி்ற்கு சுகாதாரத் துறை திறன் குழுமம் ஏற்பாடு செய்தது .

திறன், திறன் மேம்பாடு, மறுதிறன் என்பது இந்திய பாரம்பரிய மருத்துவ முறையின் உலகளாவிய பிரச்சாரத்திற்கான மந்திரம் என்று ஆயுஷ் சுகாதாரத்துறை திறன் குழுமம் மற்றும் இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணையத்தின் தலைவர் திரு வைத்ய ஜெயந்த் தியோபுஜாரி கூறினார். புதுதில்லியில் இன்று நடைபெற்ற ஆயுஷ் திறன் நிபுணர்களின் பட்டமளிப்பு விழாவில் அவர் இதனைத் தெரிவித்தார்.

யோகா சிகிச்சை உதவியாளர், யோகா ஆரோக்கிய பயிற்சியாளர், ஆயுர்வேத ஊட்டச்சத்து நிபுணர் போன்ற ஆயுஷ் துறை மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவர்களில் பலர் ஏற்கனவே சிறந்த நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

ஆயுஷ் துறையில் திறன் மேம்பாட்டு முயற்சிகளை மேம்படுத்துவதில் ஆயுஷ் துணை குழுமம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. உயர்மட்ட அமைப்புகள், ஆயுஷ் தொழில், கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற தொடர்புடையவர்களின் ஆதரவுடன், இது ஆயுஷ் களத்தில் ஈடுபட்டுள்ள தனிநபர்களின் திறன் தொகுப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பயிற்சியாளர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தொழில்துறை வல்லுநர்கள் உட்பட நாடு முழுவதிலுமிருந்து 150-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளுக்கு தொடர்பை ஏற்படுத்தவும், அறிவைப் பகிர்ந்து கொள்ளவும், ஒத்துழைக்கவும் இந்த பட்டமளிப்பு விழா ஒரு தளமாக செயல்பட்டது.

எம்.பிரபாகரன்

Leave a Reply