தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழா 2024 -ன் இறுதிப் போட்டிகள் இன்று தொடங்கின .

தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழா 2024-ன் இறுதிப் போட்டிகளின் தொடக்க விழா இளைஞர் நலன், விளையாட்டு அமைச்சகம் இன்று நாடாளுமன்றத்தில் ஏற்பாடு செய்திருந்தது. இதன் நிறைவு விழா 2024 மார்ச் 6 அன்று புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறும்.

நிறைவு விழாவில் மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா, மத்திய விளையாட்டு, இளைஞர் நலத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

தொடக்க விழாவில் பேசிய இளைஞர் நலத்துறைச் செயலாளர் திருமதி மீதா ராஜீவ்லோச்சன், இந்தியா எப்போதும் இளைஞர்களால் வழிநடத்தப்படும் நாடு என்றும், இந்த நாட்டின் எதிர்காலம் இளைஞர்களிடம் உள்ளது என்றும் கூறினார். இந்திய இளைஞர்கள் அனைத்து துறைகளிலும் முன்னணியில் உள்ளனர் என்றும் அவர் கூறினார்.

மை பாரத் தளம் தொடங்கப்பட்ட மூன்றே மாதங்களில் சுமார் 1.5 கோடி இளைஞர்கள் அதில் பதிவு செய்துள்ளனர் என்று அவர் கூறினார்.

தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழா 2024, நாடு முழுவதும் 2024 பிப்ரவரி 9  முதல்  மார்ச் 6 வரை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இளைஞர் நாடாளுமன்றம் நாட்டின் 785 மாவட்டங்களை உள்ளடக்கிய மூன்று நிலைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திவாஹர்

Leave a Reply