ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி கடைப்பிடிக்கப்படும் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-
“சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, எனது சக குடிமக்கள் அனைவருக்கும், குறிப்பாக மகளிருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாலின சமத்துவம், மகளிர் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பெண்களின் சாதனைகள் மற்றும் அவர்களின் முயற்சிகளை அங்கீகரிக்க இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு சம வாய்ப்புகளை வழங்குவதன் அவசியத்தை வலியுறுத்தவும், வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் அவர்களுக்கு அதிகாரம் அளிக்கவும் இது ஒரு முக்கியமான தருணமாகும். இன்றும் பெண்கள் பல சவால்களை எதிர்கொள்கின்றனர், அவற்றை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம், விண்வெளி, ராணுவம், விளையாட்டு என அனைத்து துறைகளிலும் பெண்கள் புதிய சாதனைகளை படைத்து வருகின்றனர். இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் மகளிர் சக்தி, அவர்களின் தலைமைத்துவத்தின் சிறப்பான காட்சியைக் காண முடிந்தது.
மகளிர் தின கொண்டாட்டங்கள் வெற்றியடைய வாழ்த்துகிறேன். அனைத்து மகளிரின் பிரகாசமான எதிர்காலத்திற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
திவாஹர்