ஜார்க்கண்ட் மாநிலம் சாய்பாசாவில் 3 நாள் தேசிய பால் பண்ணை மற்றும் வேளாண் கண்காட்சியை மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா இன்று தொடங்கி வைத்தார்.

ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பும் மாவட்டத்தில் உள்ள சாய்பாசாவில் 3 நாள் தேசிய பால் பண்ணை மற்றும் வேளாண் கண்காட்சியை பழங்குடியினர் விவகாரங்கள், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா இன்று தொடங்கி வைத்தார்.

அர்ஜுன் முண்டா தனது உரையில், விவசாயத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் கோல்ஹான் நிலத்தில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். வேளாண் துறையில் இன்று நாடு முன்னேறி வருகிறது, ஆனால் நமது பிராந்தியம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது என்று அவர் கூறினார்.

எனவே, இப்போது இந்த பகுதியில் விவசாய பணிகளை மேம்படுத்த பணியாற்ற உள்ளோம். ஜார்க்கண்டில் இதுபோன்ற முதல் நிகழ்ச்சியை ஹரியானா மாநிலம் கர்னாலில் உள்ள தேசிய பால்வள ஆராய்ச்சி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது என்று மத்திய அமைச்சர் கூறினார்.

இந்த நேரத்தில், இங்கு பால் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்று நிறுவனத்திடமிருந்து தகவல் கிடைத்தது, மேலும் இந்த பகுதியில் அதன் மையங்களில் ஒன்றைத் திறக்க முயற்சிக்கிறேன். இதனால் மக்கள் பால் உற்பத்தியில் உதவ முடியும். நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கிய விவசாயிகளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக திரு முண்டா கூறினார்.

பிரதமர் பயிர்க் காப்பீடு, பிரதமரின் விவசாயிகள் ஊக்க நிதித் திட்டம் போன்ற அரசு தொடங்கியுள்ள பல்வேறு முக்கியத் திட்டங்களின் பயன்களை விவசாய சமூகத்தினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று திரு. அர்ஜுன் முண்டா வலியுறுத்தினார்.

கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளைப் பார்வையிட்ட மத்திய அமைச்சர், உழவர் உற்பத்தியாளர் அமைப்பு மற்றும் உள்ளூர் விவசாயிகளுடன் கலந்துரையாடினார். நமது விவசாயிகளின் கடின உழைப்பு மற்றும் பயிர் தெளிப்பு மற்றும் பயிர் கண்காணிப்புக்கு பயன்படுத்தப்படும் விவசாய ட்ரோன்களை அறிமுகப்படுத்துவது போன்ற வேளாண் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்கள் காரணமாக நாடு உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளது என்று அவர் கூறினார்.

ஹரியானாவின் கர்னலில் உள்ள ஐசிஏஆர்-தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனம் இந்த பால் கண்காட்சி மற்றும் வேளாண் கண்காட்சியை 2024 மார்ச் 9-11, முதல் ஏற்பாடு செய்கிறது. பழங்குடியினர் பகுதியில் கால்நடைகள் மற்றும் விவசாயத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திவாஹர்

Leave a Reply