மத்திய மின்துறை அமைச்சர் திரு ஆர்.கே.சிங் மற்றும் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், ஆகியோர் இணைந்து நாளை (2024 மார்ச் 10) மத்தியப் பிரதேசத்தில் தேசிய அனல் மின் கழகத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனத்தின் (என்டிபிசி ஆர்இஎல்) பரேத்தி சூரிய மின்சக்தி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகின்றனர்.
மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள பரேத்தி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்காவில் 630 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டம் ரூ. 3,200 கோடி முதலீட்டில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் நிறைவடைந்ததும் அப்பகுதியில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு இதன்மூலம் மின்சக்தி கிடைக்கும்.
இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வருவதன் மூலம், மின் கட்டமைப்புக்கு பசுமை மின்சாரம் வழங்கப்படுவது மட்டுமின்றி, மக்களுக்கு குறைந்த விலையில் மின்சாரம் கிடைப்பதும் உறுதி செய்யப்படும். அத்துடன் இத்திட்டம் அப்பகுதியில் நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும்.
எம்.பிரபாகரன்