கடந்த 10 ஆண்டுகளில் நிலக்கரித் துறை கணிசமான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது .

நாட்டின் எரிசக்தி தேவைகளை நிறைவேற்றுவதில் நிலக்கரித் துறை தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கும் அதே நேரத்தில், வேலைவாய்ப்பையும் அதிகரிக்கிறது.  2024 மார்ச் 6 நிலவரப்படி, நாட்டின் நிலக்கரி உற்பத்தி 900 மில்லியன் டன்னை எட்டியுள்ளது.  இந்த உற்பத்தி அதிகரிப்பு அத்தியாவசிய உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு பங்களிப்பது மட்டுமல்லாமல், கணிசமான வேலை வாய்ப்புகளையும் உருவாக்குகிறது. குறிப்பாக நாடு முழுவதும் நிலக்கரி நிறைந்த பிராந்தியங்களில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது.

மத்திய அரசின் நிலக்கரி உற்பத்தி செய்யும் பொதுத்துறை நிறுவனங்கள், குறிப்பாக,  இந்திய நிலக்கரி நிறுவனம் (துணை நிறுவனங்கள் உட்பட) மற்றும் என்.எல்.சி இந்தியா நிறுவனம் ஆகியவை கூட்டாக 1,28,236 ஒப்பந்த தொழிலாளர்கள் உட்பட 3,69,053 தனிநபர்களை வேலைக்கு நியமனம் செய்துள்ளனர். கூடுதலாக, இந்தத் துறை சுமார் 3.1 லட்சம் ஓய்வூதியதாரர்களை ஆதரிப்பதன் மூலம் அவர்களுடைய வாழ்வாதாரங்கள் மற்றும் சமூக நலனில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க தாக்கத்தைச்  சுட்டிக்காட்டுகிறது.

சமீபத்திய ஆண்டுகளில், இந்திய நிலக்கரி நிறுவனம் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் விரிவான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. 2014-ம் ஆண்டு முதல் 2024  பிப்ரவரி வரை 59,681 ஊழியர்களை  பணியில் அமர்த்தியுள்ளன. இதேபோல், என்.எல்.சி இந்தியா நிறுவனம் இதே காலகட்டத்தில் 4,265 நபர்களை பணியமர்த்தியுள்ளது.

திவாஹர்

Leave a Reply