சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும் இந்தியக் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 (The Citizenship (Amendment) Act, 2019 -CAA) போன்ற எந்த சட்டமும் ஏற்கத்தக்கது அல்ல. தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும். இவ்வாறு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) அமுல்படுத்தப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோதி நேற்று மாலை அறிவித்தார்.
ஏற்கனவே, மக்களவை தேர்தலுக்கு முன்பாக இந்த சட்டம் கொண்டுவரப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிய நிலையில் இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தினால் சிறுபான்மை மக்கள் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தில் இந்திய முழுவதும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகமும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
–கே பி சுகுமார்., B.E., ullatchithagaval@gmail.com