இந்தியாவின் நிலக்கரித் துறையின் திறனை அதிகரிப்பதற்கான ஒரு உத்திபூர்வ நடவடிக்கையில், பாரத் கோக்கிங் நிலக்கரி நிறுவனத்திற்கு (BCCL) சொந்தமான துக்டா நிலக்கரி நிறுவனத்தின் செயல்திறனை மேம்படுத்தும் செயல்முறையை 12.03.2024 அன்று தொடங்குவதாக நிலக்கரி அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த மைல்கல் முன்முயற்சி, நிலக்கரி இருப்புக்களை திறம்பட பயன்படுத்துவதன் மூலம் வளங்களை மேம்படுத்துவதற்கும் பொருளாதார வளர்ச்சியை இயக்குவதற்கும் அரசின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
பி.சி.சி.எல் நிறுவனத்தின் 2 மில்லியன் டன் துக்டா நிலக்கரி நிறுவனத்தின் தரம் உயர்த்துதல் வெளிப்படையான போட்டி ஏல நடைமுறை மூலம் நடைபெறும், இந்த ஒப்பந்தம் சாத்தியமான எஃகு உற்பத்தியாளருக்கு வழங்கப்படும்.
எஃகு உற்பத்தியில் ஒரு முக்கிய அங்கமான கோக்கிங் நிலக்கரி, தொழில்துறையில் குறிப்பாக, இந்தியா போன்ற வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. உயர்தர கோக்கிங் நிலக்கரியின் தேவை சீராக அதிகரித்து வருவதால், அதன் பிரித்தெடுத்தல், செயலாக்கத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முயற்சிகளின் முக்கியத்துவத்தைத் தவிர்க்க இயலாது.
எம்.பிரபாகரன்