பிரதமரின் தொலைநோக்குப் பார்வையான வளர்ச்சியடைந்த பாரதம் – வளமான பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகத்தின் சார்பில் நாகாலாந்து மாநிலத்தில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இந்த அமைச்சகத்தின் சார்பில், ‘பல்துறை விளையாட்டு வளாகம்’ மற்றும் ‘மகளிர் தொழில் முனைவோர் உதவி மையங்கள்’ ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக ரூ. 172.108 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பல்துறை விளையாட்டு வளாகம், முக்கிய விளையாட்டுக்களின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உதவுவதோடு மட்டுமல்லாமல், மாநிலத்தில் விளையாட்டு மற்றும் இதர பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் உதவும். ‘மகளிர் தொழில் முனைவோர் உதவி மையம்’ மாநிலத்தின் தொழில்முனைவோர் மகளிரை ஊக்குவிப்பதுடன், அவர்களுக்கு சந்தைத் தொடர்புகள் மற்றும் சந்தை வசதிகளை உருவாக்கும். இந்த விளையாட்டு வளாகத்தின் மூலம் சுமார் 19.8 லட்சம் மக்கள் பயனடைவார்கள். இதில் 91 சதவீதம் பேர் சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இந்த தொழில்முனைவோர் மையங்கள் மூலம் 3.25 லட்சம் பெண்கள் பயனடைவார்கள். அவர்களில் 3.16 லட்சம் பேர் சிறுபான்மையின மகளிர் ஆவார்கள்.
திவாஹர்