இந்தியாவின் மிகப்பெரிய, முதலாவது புத்தொழில் நிகழ்வான புத்தொழில் திருவிழா சாதனை அளவிலான பங்கேற்பைப் பதிவு செய்தது. இது நாட்டின் புத்தொழில் சூழல் அமைப்பில் உள்ளவர்களுக்கும் ஒரு துடிப்பான தளமாக செயல்படுகிறது. தொழில் தொடர்புடையவர்கள் மற்றும் நிபுணர்களின் சந்திப்பு ஆழ்ந்த தொழில்நுட்பம், வேளாண் தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், மருத்துவ தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, விளையாட்டு போன்ற வளர்ந்து வரும் துறைகளை மேலும் மேம்படுத்த உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா முழுவதும் புதுமை மற்றும் தொழில்முனைவை வளர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்ட இந்த நிகழ்வில், முன்னணி முதலீட்டாளர்கள், புதுமையாளர்கள் மற்றும் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் அதிக அளவில் பங்கேற்றனர். இந்த நிகழ்வு 2000-க்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள், 1000-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள், 100-க்கும் மேற்பட்ட யூனிகார்ன்கள், 300-க்கும் மேற்பட்ட தொழில்காப்பகங்கள், 3,000க்கும் மேற்பட்ட மாநாட்டு பிரதிநிதிகள், 10-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள், 3000-க்கும் மேற்பட்ட எதிர்கால தொழில்முனைவோர் மற்றும் 50,000-க்கும் மேற்பட்ட வணிக பார்வையாளர்கள் நாடு முழுவதும் இருந்து பங்கேற்றனர்.
எம்.பிரபாகரன்