போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான அதன் நடவடிக்கையைத் தொடர்ந்து, வருவாய் புலனாய்வு இயக்குநரகம் அதிகாரிகள் இன்று புதுதில்லியில், சுமார் ரூ.15 கோடி மதிப்புள்ள 1.59 கிலோ கோகைன் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். ஆப்பிரிக்காவிலிருந்து இந்தோ-நேபாள எல்லை வழியாக இந்தியாவுக்கு போதை மருந்துகள் மற்றும் சைக்கோட்ரோபிக் பொருட்கள் கடத்தலில் ஒரு கும்பல் ஈடுபட்டது.
ரகசிய உளவுத் தகவலின் அடிப்படையில், பீகாரின் ரக்சவுலில் இருந்து 22.03.2024 அன்று காலை தில்லி ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் ரயிலில் வந்த ஒருவர் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரிடம் நடத்திய சோதனையில் வெள்ளைநிறத் தூள் பொருளைக் கொண்ட வெளிர் மஞ்சள் காப்ஸ்யூல்கள் 92 மீட்கப்பட்டன. என்.டி.பி.எஸ் கள சோதனைக் கருவியைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட மாதிரி சோதனையில் மீட்கப்பட்ட பொருளில் கோக்கைன் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
மேலும் விசாரணையில், புதுதில்லி துவாரகாவில் உள்ள ஒருவருக்கு சரக்கு வழங்கப்பட இருந்தது தெரியவந்தது. விரைவான பின்தொடர்தல் நடவடிக்கையின் விளைவாக, புதுதில்லியின் துவாரகாவில் என்.டி.பி.எஸ்-ஐ எடுத்துச் செல்ல ஸ்கூட்டியில் வந்த ஒரு நைஜீரிய நாட்டவர் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டார்.
இந்த வழக்கில், ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து நேரடியாகவோ அல்லது துபாய் வழியாகவோ நேபாளத்தின் காத்மாண்டுவுக்கு விமான பாதை வழியாக டிராலி பைகளில் மறைத்து வைப்பதன் மூலமோ அல்லது உடலில் கேப்ஸ்யூல்களை உட்கொள்வதன் மூலமோ இந்தக் கும்பல் போதைப் பொருளைக் கடத்தி வந்தது தெரியவந்தது.. பின்னர் இந்தக் கும்பல் புதுதில்லியில் இருந்து காட்மாண்டுவுக்கு வந்த இந்தியர்களைப் பயன்படுத்தி, கடத்திலில் ஈடுபட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது
சுமார் ரூ.15 கோடி மதிப்புள்ள 1.59 கிலோ எடையுள்ள 92 காப்ஸ்யூல்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மீட்கப்பட்ட கோக்கைன் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக நைஜீரியாவைச் சேர்ந்த அந்த நபரும், ரயில் நிலையத்தில் பிடிபட்டவரும் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
எஸ்.சதிஸ் சர்மா