கியால்ட்சுன் ஜெட்சன் பெமா வாங்சுக் தாய் சேய் மருத்துவமனை திறப்பு விழா.

இந்திய அரசின் உதவியுடன் திம்புவில் கட்டப்பட்டுள்ள அதிநவீன மருத்துவமனையான கியால்ட்சுன் ஜெட்சன் பெமா வாங்சுக் தாய் சேய் மருத்துவமனையைப் பிரதமர் திரு. நரேந்திர மோடியும்  பூட்டான் பிரதமர் திரு ஷெரிங் டோப்கேயும் தொடங்கி வைத்தனர்.

150 படுக்கைகள் கொண்ட கியால்ட்சுன் ஜெட்சன் பெமா வாங்சுக் தாய் சேய் மருத்துவமனையை இரண்டு கட்டங்களாக மேம்படுத்த இந்திய அரசு ஆதரவளித்தது. மருத்துவமனையின் முதல் கட்டம் ரூ .22 கோடி செலவில் கட்டப்பட்டு 2019 முதல் செயல்பட்டு வருகிறது. இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள் 12-வது ஐந்தாண்டு திட்டத்தின் ஒரு பகுதியாக 2019-ம் ஆண்டு ரூ.119 கோடி செலவில் தொடங்கப்பட்டு தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த மருத்துவமனை பூட்டானில் தாய் சேய் சுகாதார சேவைகளின் தரத்திற்கு மதிப்பு சேர்க்கும். இந்தப் புதிய மையத்தில் குழந்தை மருத்துவம், பெண்ணோயியல் மற்றும் மகப்பேறியல், மயக்கவியல், அறுவை சிகிச்சை அரங்கம், பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை மற்றும் குழந்தைகளுக்கான  தீவிர சிகிச்சை உள்ளிட்ட அதிநவீன வசதிகள் இருக்கும்.

கியால்ட்சுன் ஜெட்சன் பெமா வாங்சுக் தாய் சேய் மருத்துவமனை, சுகாதாரப் பராமரிப்பில் இந்தியா-பூட்டான் கூட்டாண்மைக்குப் பிரகாசமான உதாரணமாகத் திகழ்கிறது.

திவாஹர்

Leave a Reply