தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் Group 1 தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது.
துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், உதவி ஆணையர் வணிக,வரிகள், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், உதவி இயக்குனர் ஊரக வளர்ச்சி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் அலுவலர் ஆகிய காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அதற்கான கல்வி தகுதி, இட ஒதுக்கீடு, மாற்று திறனாளிகள், முன்னாள் இராணுவத்திற்கான வயது வரம்பு போன்ற விவரங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமது அறிக்கையில் விவரமாகக் குறிப்பிட்டுள்ளது.
எனவே, தகுதி உள்ளவர்கள் இந்த போட்டித் தேர்வில் பங்கேற்று பயன்பெறும் வகையில் அந்த அறிவிப்பு ஆணையின் உண்மை நகலை நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவேற்றம் செய்துள்ளோம்.
-Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040