தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவு பெற்றது. வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30-ம் தேதி கடைசி நாள். தமிழ்நாடு, புதுச்சேரியில் ஏப்.19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு; ஜூன் 4-ல் வாக்கு எண்ணிக்கை. சேலத்தில் 39 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் 27 பேரின் மனுக்கள் ஏற்பு; 12 பேரின் மனுக்கள் நிராகரிப்பு. கோவை தொகுதியில் 59 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 41 மனுக்கள் ஏற்பு; 18 மனுக்கள் நிராகரிப்பு. வேலூர் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 50 மனுக்களில் 31 வேட்புமனுக்கள் ஏற்பு; 19 மனுக்கள் நிராகரிப்பு. தேனி தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட 43 மனுக்களில் 35 வேட்புமனுக்கள் ஏற்பு; 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. தற்போது தேனி மக்களவை தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் டிடிவி தினகரனின் வேட்புமனுவும் ஏற்கப்பட்டது.
எஸ்.சதிஸ் சர்மா