எட்டு முக்கிய தொழில்களின் ஒருங்கிணைந்த குறியீடு பிப்ரவரி 2023 குறியீட்டுடன் ஒப்பிடும்போது பிப்ரவரி 2024-ல் 6.7 சதவீதம் அதிகரித்துள்ளது. நிலக்கரி, இயற்கை எரிவாயு, சிமெண்ட், எஃகு, கச்சா எண்ணெய், மின்சாரம் மற்றும் சுத்திகரிப்பு தயாரிப்புகளின் உற்பத்தி 2024 பிப்ரவரியில் நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
சிமெண்ட், நிலக்கரி, கச்சா எண்ணெய், மின்சாரம், உரங்கள், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருட்கள் மற்றும் எஃகு ஆகிய எட்டு முக்கிய தொழில்களின் ஒருங்கிணைந்த மற்றும் தனிப்பட்ட செயல்திறனை ஐசிஐ அளவிடுகிறது. தொழில்துறை உற்பத்தி குறியீட்டில் ஐஐபி சேர்க்கப்பட்டுள்ள எட்டு முக்கிய தொழில்கள் 40.27 சதவீதத்தைக் கொண்டுள்ளன.
நவம்பர் 2023-க்கான எட்டு முக்கிய தொழில்களின் குறியீட்டின் இறுதி வளர்ச்சி விகிதம் 7.9 சதவீதமாக திருத்தப்பட்டுள்ளது. 2023-24 ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் ஐசிஐயின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 7.7 சதவீதம் ஆகும்.
எம்.பிரபாகரன்