2024 பிப்ரவரி மாதம் வரையிலான மத்திய அரசின் மாதாந்திர கணக்குகள் ஒருங்கிணைக்கப்பட்டு அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன் சிறப்பம்சங்கள் வருமாறு:-
2024 பிப்ரவரி வரை இந்திய அரசு ரூ.22,45,922 கோடி (மொத்த ரசீதுகளில் தொடர்புடைய ஆர்இ 2023-24-ல் 81.5%) பெற்றுள்ளது. இதில் ரூ.18,49,452 கோடி வரி வருவாய் (மத்திய அரசுக்கு நிகர), ரூ 3,60,330 கோடி வரி அல்லாத வருவாய் மற்றும் ரூ. 36,140 கோடி கடன் அல்லாத மூலதன ரசீதுகள் அடங்கும். கடன் அல்லாத மூலதன ரசீதுகளில் ரூ. 23,480 கோடி கடன்கள் மீட்பு மற்றும் ரூ.12,660 கோடி இதர மூலதன ரசீதுகள் அடங்கும். இந்தக் காலகட்டம் வரை இந்திய அரசால் வரிகளின் பங்காக ரூ.10,33,433 கோடி மாநில அரசுகளுக்கு மாற்றப்பட்டுள்ளது, இது முந்தைய ஆண்டை விட ரூ.2,25,345 கோடி அதிகமாகும்.
இந்திய அரசின் மொத்த செலவினம் ரூ.37,47,287 கோடி (தொடர்புடைய ஆர்இ 2023-24 இல் 83.4%), இதில் ரூ.29,41,674 கோடி வருவாய் கணக்கிலும், ரூ.8,05,613 கோடி மூலதனக் கணக்கிலும் உள்ளது. மொத்த வருவாய் செலவினங்களில், ரூ.8,80,788 கோடி வட்டி செலுத்துதலுக்காகவும், ரூ.3,60,997 கோடி முக்கிய மானியங்களுக்காகவும் வழங்கப்பட்டுள்ளது.