கிப்ட் சிட்டி எனப்படும் குஜராத் சர்வதேச நிதிநுட்ப இன்டர்நேஷனல் ஃபைனான்ஸ் டெக்-சிட்டியின் சர்வதேச நிதி சேவை மையத்தை, உலகளாவிய நிதி மற்றும் கணக்கியில் மையமாக உருவாக்குவதற்கான நிபுணர் குழு தனது அறிக்கையை சர்வதேச நிதி சேவைகள் மைய ஆணையத்தின் (ஐஎப்எஸ்சிஏ) தலைவரிடம் 2024 மார்ச் 26 அன்று சமர்ப்பித்துள்ளது.
2024 ஜனவரி 18 அன்று நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிக்கையைத் தொடர்ந்து நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இதில் புத்தக பராமரிப்பு, கணக்கியல், வரிவிதிப்பு மற்றும் நிதிக் குற்ற இணக்கம் ஆகியவை ஐஎப்எஸ்சிஏ சட்டம், 2019-ன் பிரிவு 3 (1) (e) (xiv)-ன் கீழ் ‘நிதி சேவைகள்’ என்று அறிவிக்கப்பட்டன. இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் (ஐ.சி.ஏ.ஐ) தலைவர் இந்த நிபுணர் குழுவுக்கு தலைமை தாங்கினார். இந்தக் குழுவில் தொழில்துறை, கல்வியாளர்கள் மற்றும் அரசு சார்ந்த நிபுணர்கள் இடம்பெற்றிருந்தனர்.
கணக்கேடுகள் பராமரிப்பு, கணக்கியல், வரிவிதிப்பு மற்றும் நிதிக் குற்றங்களுக்கு இணக்கச் சேவைகளை மேற்கொள்வதற்கான விரிவான ஒழுங்குமுறை ஆட்சிமுறையை இந்தியாவில் உள்ள ஐஎப்எஸ்சிஏ -யிடமிருந்து நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. கூடுதலாக, கிப்ட் ஐஎப்எஸ்சியை ‘உலகளாவிய நிதி மற்றும் கணக்கியல் மையமாக’ மேம்படுத்துவதற்கும் குழு பல பரிந்துரைகளை செய்துள்ளது. இதில் பணியாளர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அடங்கும்.
தனது அறிக்கையில், கிப்ட் ஐஎப்எஸ்சிஏ புத்தக பராமரிப்பு, கணக்கியல், வரிவிதிப்பு மற்றும் நிதிக் குற்ற இணக்க சேவைகளுக்கான உலகளாவிய மையமாக மாறுவதற்கான திறனை எடுத்துக்காட்டுகிறது, இது திறமையான தொழிலாளர்களுக்கு பெரிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.
திவாஹர்