பொதுக் கொள்கை மற்றும் நிர்வாகத்திற்கான கம்போடியாவின் சிவில் ஊழியர்களுக்கான இரண்டு வார கால 4வது பயிற்சித் திட்டம் நல்லாட்சிக்கான தேசிய மையத்தில் தொடங்குகிறது.

பொதுக் கொள்கை மற்றும் நிர்வாகத்திற்கான கம்போடியாவின் சிவில் ஊழியர்களுக்கான இரண்டு வார கால 4 வது பயிற்சித் திட்டம் இன்று முசோரியில் உள்ள நல்லாட்சிக்கான தேசிய மையத்தில் (NCGG) தொடங்குகிறது . 2024 மார்ச் 26 முதல் ஏப்ரல் 6 , 2024 வரை வெளியுறவு அமைச்சகத்துடன் (MEA) இணைந்து இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

முசோரி மற்றும் புது தில்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில், ஆய்வு அமைச்சகம் மற்றும் கல்வி, இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் இயக்குநர், துணை இயக்குநர், தலைமை அலுவலகம் எனப் பணியாற்றும் கம்போடியாவின் 39 அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

நிகழ்ச்சிக்கு NCGG இன் இயக்குநர் ஜெனரல் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் பொதுக் குறைகள் (DARPG) துறையின் செயலர் ஸ்ரீ வி. ஸ்ரீனிவாஸ் அவர்கள் கலந்துகொண்டார். விழாவில் பேசிய அவர் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள வரலாற்று உறவுகள் மற்றும் நாகரிகங்கள் குறித்து பேசினார். சிறந்த கொள்கைகளை உருவாக்குதல், சேவை வழங்குதல், நிறுவனங்களை மாற்றுதல் மற்றும் குடிமக்களை அரசாங்கத்துடன் நெருக்கமாகக் கொண்டுவருதல் ஆகியவற்றை உறுதிசெய்ய டிஜிட்டல் தொழில்நுட்பம் இந்தியாவில் எவ்வாறு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பதை எடுத்துக்காட்டும் இந்தியாவின் ஆளுகை மாதிரியையும் அவர் விளக்கினார்.

DARPG, செயலாளர், “வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வைக் கொண்டுவருவதற்கும் நல்ல நிர்வாகத்தை உறுதிப்படுத்துவதற்கும் நிறுவனங்களின் டிஜிட்டல்மயமாக்கல் அவசியம்” என்றார். DARPG, NESDA மற்றும் Khelo India திட்டத்தின் கீழ் மக்கள் குறை தீர்க்கும் பொறிமுறை, ஓய்வூதிய நலன் குறித்து அவர் விரிவாக விளக்கினார். அவர் தனது உரையின் போது அதிகாரிகளை குழுக்களாகப் பணியாற்றவும், முக்கிய கொள்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்து விளக்கங்களை அளிக்கவும் ஊக்குவித்தார்.

நல்லாட்சிக்கான தேசிய மையம் என்பது இந்திய அரசின் பணியாளர்கள், பொதுக் குறைகள் மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகத்தின் நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுக் குறைகள் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனமாகும். NCGG வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து 17 நாடுகளின் அரசு ஊழியர்களுக்கு பயிற்சி அளித்துள்ளது. பங்களாதேஷ், கென்யா, தான்சானியா, துனிசியா, சீஷெல்ஸ், காம்பியா, மாலத்தீவுகள், இலங்கை, ஆப்கானிஸ்தான், லாவோஸ், வியட்நாம், நேபாளம், பூட்டான், மியான்மர், எத்தியோப்பியா, எரேட்ரியா மற்றும் கம்போடியா.

எம்.பிரபாகன்

Leave a Reply