வெலிங்டனில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி (டி.எஸ்.எஸ்.சி.)க்கு 2024, மார்ச் 28 அன்று சென்றிருந்த கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார், 79வது பணியாளர் பயிற்சியில் கலந்துகொண்டு இந்திய ராணுவத்தின் எதிர்கால தலைமைத்துவம் பற்றி உரையாற்றினார். இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் தன்மையை நிறுவுவதில் இந்தியாவின் கடல்சார் பாரம்பரியம் மற்றும் நாட்டின் புவியியலின் முக்கியத்துவம் குறித்து கடற்படைத் தளபதி எடுத்துரைத்தார். தற்சார்புக் கொள்கையைப் பின்பற்றுகின்ற, போருக்குத் தயாராக உள்ள, நம்பகத்தன்மை வாய்ந்த, ஒருங்கிணைந்த மற்றும் எதிர்காலத்திற்கு ஆதாரமான படையாக இந்தியக் கடற்படை மாறியுள்ளதையும் அவர் எடுத்துரைத்தார். கடற்கொள்ளை எதிர்ப்பு உட்பட இந்தியக் கடற்படையால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சில நடவடிக்கைகள் குறித்து அட்மிரல் ஆர் ஹரி குமார் விரிவாக விளக்கினார். இந்தியாவின் வர்த்தகம் மற்றும் பிற கடல்சார் நலன்களைப் பாதுகாப்பதில் கடற்படையின் முக்கியப் பங்கு குறித்து அவர் பேசினார். தேசிய ராணுவ நோக்கங்களை அடைவதற்கு ஆயுதப் படைகளுக்குள் கூட்டான ஒருங்கிணைப்பின் முக்கியத்துவத்தையும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
திவாஹர்