மின்னணுவியல் மற்றும் இயந்திரவியல் பொறியாளர்களின் 33-வது தலைமை இயக்குநராக லெப்டினன்ட் ஜெனரல் ஜே.எஸ்.சிதானா பொறுப்பேற்றார்.

லெப்டினன்ட் ஜெனரல் ஜே.எஸ்.சிதானா ஏப்ரல் 01-ம் தேதி மின்னணுவியல் மற்றும் இயந்திரவியல் பொறியாளர்களின்  33-வது தலைமை இயக்குநராகவும், இஎம்இ படையணியின் மூத்த கர்னல் கமாண்டண்டாகவும் பொறுப்பேற்றார். 38 ஆண்டுகளுக்கும் மேலான அவரது பணிக்காலத்தில், அவர் பல்வேறு முக்கியமான பொறுப்புகளை வகித்துள்ளார்.  தற்போதைய நியமனத்திற்கு முன்பு, அவர் இஎம்இ-யின் ராணுவக் கல்லூரியின் கமாண்டன்ட் பதவியை இரண்டு ஆண்டு காலத்திற்கு வகித்தார்.  

லெப்டினன்ட் ஜெனரல் ஜே.எஸ்.சிதானா கடக்வாஸ்லாவில்  உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவர் ஆவார். மேலும் டிசம்பர் 14, 1985 அன்று டேராடூனில் உள்ள இந்திய ராணுவ அகாடமியில் இருந்து இஎம்இ படைப்பிரிவில் நியமிக்கப்பட்டார். உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் மேலாண்மை ஆய்வுகளில் முதுகலை பட்டமும், ஐ.ஐ.டி கான்பூரில் எம்.டெக் மற்றும் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் முதுகலை தத்துவமும் இவரது கல்வித் தகுதிகளில் அடங்கும்.

டி.ஜி.இ.எம்.இ.யாக பொறுப்பேற்றவுடன், லெப்டினன்ட் ஜெனரல் ஜே.எஸ்.சிதானா, புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவு சின்னத்தில் மலர் வளையம்  வைத்து  படைப்பிரிவின் துணிச்சலான வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

திவாஹர்

Leave a Reply