மிக அதிக அளவுக்கு கடன்களை வழங்கி ஐஆர்இடிஏ புதிய சாதனை படைத்துள்ளது.

இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை (ஐஆர்இடிஏ), 2023-24-ம் நிதியாண்டில் மிக அதிக அளவுக்கு வருடாந்திர கடன் ஒப்புதல்களையும், கடன் விநியோகத்தையும் மேற்கொண்டு புதிய சாதனை படைத்துள்ளது.   இந்த நிறுவனம் இந்த நிதியாண்டில் ரூ.37,354 கோடி அளவுக்கு கடன் ஒப்புதல் அளித்து, ரூ.25,089 கோடி அளவுக்கு கடன்களை வழங்கியுள்ளது. இது கடன் புத்தகத்தில் 26.71% அளவிலான வளர்ச்சிக்கு வழிவகுத்து, இப்போது ரூ. 59,650 கோடியாக உள்ளது.

2024 மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைந்த  ஆண்டிற்கான வணிக செயல்திறன்  வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டில் 37,354 கடன்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 16.63 சதவீதம் அதிகமாகும். வழங்கப்பட்ட கடன்களின் எண்ணிக்கை 25,089. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இதன் வளர்ச்சி 15.94 சதவீதமாகும்.

நிறுவனத்தின் செயல்திறன் குறித்து கருத்து தெரிவித்த ஐஆர்இடிஏ-யின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ஸ்ரீ பிரதீப் குமார் தாஸ், “2023-24 நிதியாண்டிற்கான ஐஆர்இடிஏ-யின் சாதனை, நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி புரட்சியை இயக்குவதற்கான அயராத உறுதிப்பாட்டை விளக்குவதாக அமைந்துள்ளது. எங்கள் பங்குதாரர்கள், வணிக கூட்டாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் மதிப்புமிக்க  ஆதரவு இல்லாமல் இந்தச் சாதனை சாத்தியமில்லை. மத்திய அரசின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் வரும் ஆண்டுகளில் எங்களது செயல்பாடு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம்” என்று கூறியுள்ளார்.

திவாஹர்

Leave a Reply