30 அடி ஆழம் உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட பள்ளி மாணவன்!-திருவெறும்பூர் அருகே நடந்த துயரம்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அசூர் கிராமத்தில் 30 அடி ஆழம் கொண்ட கிணற்றில் 15 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் விழுந்து விட்டதாக திருவெறும்பூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு வந்த தகவலை அடுத்து, நிலைய அலுவலர், ந, உதயகுமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள், சூசை மைக்கில் ராஜ், க,வெங்கடேசன், செ, முருகன், சை, சையது அன்சார்
திராவிடன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று கிணற்றில் இருந்து சடலத்தை மீட்டு திருவெறும்பூர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட அந்த சிறுவன் பள்ளி மாணவன் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கோடை காலம் என்பதால் கிணற்றுக்கு குளிக்க சென்ற அந்த சிறுவன் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இது குறித்து திருவெறும்பூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆண்டாண்டு அழுதாலும் மாண்டவர்கள் பிழைப்பதில்லை. எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை படிக்க வைப்பதில் காட்டும் ஆர்வத்தை, அவர்களது உயிர் பாதுகாப்பிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வீட்டை விட்டு வெளியேறும் குழந்தைகள் யாருடன் செல்கிறார்கள் எங்கு செல்கிறார்கள் என்பதை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். இனி கோடை விடுமுறை காலம் பெற்றோர்கள் குழந்தைகள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA OPC PVT LTD,
Mobile No.98424 14040

Leave a Reply