சமத்துவத்தின் மீது நாம் எப்போதும் நம்பிக்கை கொண்டிருப்பதால், சமத்துவம் குறித்து இந்தப் பூமியில் உள்ள எவரிடமிருந்தும் போதனைகள் எதுவும் இந்தியாவுக்குத் தேவையில்லை என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு. ஜக்தீப் தன்கர் உறுதிபடக் கூறியுள்ளார். நாடுகளை உள்நோக்கிப் பார்க்குமாறு கேட்டுக்கொண்ட அவர், “சில நாடுகள் இன்னும் ஒரு பெண் அதிபரைக் கொண்டிருக்காத நிலையில், இந்தியா ஒரு பெண் குடியரசுத் தலைவரைக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். இங்கிலாந்துக்கு முன்பாக பெண் பிரதமரைக் கொண்டிருந்த நாடு இந்தியா என்று அவர் சுட்டிக்காட்டினார். 200 ஆண்டுகளை நிறைவு செய்த மற்ற பல நாடுகளின் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பெண் நீதிபதி கூட இல்லை என்று தெரிவித்த அவர், இந்தியாவில் பெண் நீதிபதிகள் உண்டு என்பதை சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டுள்ள அவர் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து தவறான கதைகள் மற்றும் தவறான தகவல்கள் பரப்பப்படுவதற்கு எதிராக எச்சரித்துள்ள திரு தன்கர், குடியுரிமை திருத்தச் சட்டம் எந்தவொரு இந்திய குடிமகனின் குடியுரிமையைப் பறிக்கவோ அல்லது முன்பு போல இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதிலிருந்து யாரையும் விலக்கவோ முயற்சிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். அண்டை நாடுகளில் உள்ள சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமையைப் பெற சிஏஏ உதவுகிறது என்று குறிப்பிட்டுள்ள குடியரசுத் துணைத் தலைவர், “மத அர்ப்பணிப்பு காரணமாக நம் அண்டை நாடுகளில் துன்புறுத்தப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் இந்த நிவாரணம், எவ்வாறு பாரபட்சமாக இருக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
2014 டிசம்பர் 31 அல்லது அதற்கு முன்னர் இந்தியாவுக்கு வந்தவர்களுக்கு குடியுரிமை திருத்தச் சட்டம் பொருந்தும் என்று குறிப்பிட்டுள்ள அவர், அது உள்நாட்டிற்கு வருவதற்கான அழைப்பு அல்ல என்று தெரிவித்துள்ளார். “இந்த விளக்கங்களை நாம் நடுநிலையாக்க வேண்டும். இவை அறியாமையால் அல்ல, நம் நாட்டை வீழ்த்துவதற்கான ஒரு உத்தியிலிருந்து வெளிப்படுகின்றன” என்று அவர் எச்சரித்துள்ளார்.
முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியில் 2023 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி பயிற்சியாளர்களின் தொழில்முறை படிப்பின் முதல் கட்டத்தின் முடிவில் உரையாற்றிய அவர், நமது புகழ்பெற்ற மற்றும் வலுவான அரசியலமைப்பு அமைப்புகளை களங்கப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட உண்மைக்கு புறம்பான தேச விரோத கதைகளின் இதுபோன்ற திட்டமிடலை நிராகரிக்குமாறு இளம் மனங்களுக்கு அழைப்பு விடுத்தார்.
சமீப காலமாக நிர்வாகம் சிறப்பான திருப்பத்தை அடைந்துள்ளது என்று கூறிய குடியரசுத் துணைத் தலைவர், சலுகை பெற்ற வம்சாவளியினர் இப்போது புறவழிச் சந்துகளில் சிக்கித் தவிப்பதாகக் கூறினார். “சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்பது முன்மாதிரியான முறையில் திணிக்கப்படுவதாலும், ஊழல் இனி ஒரு வர்த்தகப் பொருளாக இல்லாததாலும் ஜனநாயக விழுமியங்களும் சாரமும் ஆழமடைந்து வருகின்றன. முன்னதாக ஒப்பந்தம், ஆட்சேர்ப்பு, வாய்ப்பு ஆகியவற்றைக் கடந்து செல்வதற்கான ஒரே வழிமுறை இதுதான், “என்று அவர் மேலும் கூறினார்.
சில சலுகை பெற்ற வம்சாவளியினர் முன்னர் சட்ட நடைமுறைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டவர்கள் என்றும், சட்டம் அவர்களை அடைய முடியாது என்றும் நினைத்ததாகக் கூறிய குடியரசு துணைத்தலைவர், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது நீண்ட காலமாக நம்மிடமிருந்து நழுவிச் சென்றதும், நிர்வாக நரம்புகளில் ரத்தம் போல் ஓடிக் கொண்டிருந்த ஊழலும் இப்போது கடந்த காலப் பிரச்சினைகளாகிவிட்டன என்று அவர் இளம் அதிகாரிகளிடம் கூறினார்.
நமது அதிகார வழித்தடங்கள் ஊழல் சக்திகளிடமிருந்து தூய்மைப்படுத்தப்பட்டுள்ளன, அவர்கள் முடிவெடுப்பதை சட்டபூர்வமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று பாராட்டிய குடியரசுத் துணைத் தலைவர், நாடு விரக்தியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். இந்தியா நம்பிக்கை மற்றும் சாத்தியக்கூறுகளின் பூமியாக மாறியுள்ளது. நாடு முழுவதும் உற்சாகமான மனநிலை நிலவுவதாகக் கூறிய குடியரசு துணைத் தலைவர், இந்தியா இனி ஒரு ஆற்றலைக் கொண்ட நாடாக நகர்ந்து கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார்.
உலகளவில் நமது தோற்றம் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டிய திரு. தன்கர், விநியோகச் சங்கிலியைக் காப்பாற்றவோ அல்லது கடற்கொள்ளையர்களால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கவோ நமது கடற்படை செயல்படாத ஒரு வாரம் கூட இல்லை என்றார். அவர்களின் சாதனை குறித்து ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொள்வார்கள் என்று அவர் மேலும் கூறினார்.
நீண்டகாலமாக ஆட்சியில் இருந்தவர்கள், அதிகாரப் பதவிகளை வகித்தவர்கள், தேசத்தின் வளர்ச்சிக்குப் பங்காற்றும் வாய்ப்பைப் பெற்றவர்கள், அதிகாரத்தை இழந்ததால் நாட்டின் வளர்ச்சிப் பாதையில் ஆர்வம் இல்லாதவர்கள் ஆகியோரிடமிருந்து நமது ஜனநாயக ஆட்சி முறைக்கு மிகப் பெரிய சவால் எழுகிறது என்று அவர் கூறினார்.
மக்களின் அறியாமையைப் பணமாக்க ஒரு தவறான அறிக்கையை வெளியிடுவதைப்போல ஜனநாயகத்திற்கு சவாலானது எதுவும் இருக்க முடியாது என்று எச்சரித்த குடியரசு துணைத்தலைவர், அத்தகைய நபர்களை அம்பலப்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். “அதிகார பதவிகளை வகித்த சில நபர்கள், அதிகாரம் அல்லது அதிகாரத்தை விட்டு வெளியேறியவுடன், நாட்டின் வளர்ச்சிப் பாதையில் மோசமான பசியைக் கொண்டுள்ளனர்,” என்று அவர் மேலும் கூறினார்.
குடியரசுத் துணைத் தலைவர் தனது உரையில், ஐ.ஏ.எஸ். பயிற்சி அதிகாரிகளிடம் மக்கள் அவர்களை முன்மாதிரியாகப் பார்க்கிறார்கள் என்று கூறினார். “இளம் உள்ளங்களை பின்பற்றவும், ஊக்குவிக்கவும், எந்தவொரு திறனிலும் பெரியவர்களின் பாராட்டைப் பெறவும் மதிப்புள்ள செயல்களால் நீங்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும்” என்று அவர் கேட்டுக் கொண்டார்
நமது நாகரிக விழுமியங்களை வழிகாட்டும் கொள்கையாக விவரித்த குடியரசுத் துணைத் தலைவர், “சேவை உணர்வு மற்றும் கருணையுடன் இணைந்து பணியாற்றுங்கள்” என்று இளம் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார்.
உத்தராகண்ட் ஆளுநர் லெப்டினன்ட் ஜெனரல் குர்மித் சிங் , லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியின் இயக்குநர் திரு. ஸ்ரீராம் தரணிகாந்தி மற்றும் பிரமுகர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
திவாஹர்