கச்சதீவை சட்டப்பூர்வமாக மீட்பது சாத்தியம்தான் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை.

கச்சத்தீவை சட்டபூர்வமாக மீட்பது சாத்தியம்தான் என்று திருச்சியில் மதிமுகவின் மக்களவைத் தேர்தல் அறிக்கையை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டார்.

சுயாட்சியும் கூட்டாட்சியும், மதச்சார்பின்மை, சமூக நீதி, தமிழ் ஆட்சி மொழி கல்வி, நதிநீர் உரிமைகள்,சிறுபான்மையினர் நலன், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலன், தூக்கு தண்டனை ஒழிப்பு, தமிழீழம் மலர பொது வாக்கெடுப்பு, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து உள்ளிட்ட 74 தலைப்புகளின் கீழ் மதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

கச்சத்தீவை சட்டபூர்வமாக மீட்பது சாத்தியம்தான். நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்ற வேண்டும், கச்சத்தீவு தொடர்பாக வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.அது தொடர்பாக நீதிமன்றமே முடிவு எடுக்கலாம்.

மதிமுக தன்னிச்சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பது கட்சியின் நிலைப்பாடு. மதிமுகவின் தனித்தன்மையை பாதுகாத்து கொள்ளும் விதத்தில் தனி சின்னத்தில் போட்டி என முதல்வரிடமும் தெரிவித்துவிட்டு தான் அறிவித்தோம். மதிமுக சின்னமான பம்பரம் சின்னம் பெற முயற்சித்தோம். ஆனால் தேர்தல் ஆணையம் செய்த தவறால் பம்பரம் சின்னத்தை இழக்க நேரிட்டது. இந்த நிலையில் கட்சியின் தனித்தன்மையை பாதுகாக்க பொதுச்சின்னத்தை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்றார் வைகோ.

எஸ்.திவ்யா

Leave a Reply