சிங்கப்பூரில் தூய்மையான பொருளாதார முதலீட்டாளர் மன்றத்துக்கு முன்னேற்றத்திற்கான இந்தோ-பசிபிக் பொருளாதார கட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

சிங்கப்பூரில் தூய்மையான பொருளாதார முதலீட்டாளர் மன்றத்துக்கு முன்னேற்றத்திற்கான இந்தோ-பசிபிக் பொருளாதார கட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

முன்னேற்றத்துக்கான இந்தோ-பசிபிக் பொருளாதார கட்டமைப்பு (ஐபிஇஎஃப்) 2022-ம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டது. தற்போது ஆஸ்திரேலியா, புருனே தாருஸ்ஸலாம், ஃபிஜி, இந்தியா, இந்தோனேசியா, ஜப்பான், கொரிய குடியரசு, மலேசியா, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, அமெரிக்கா, வியட்நாம் ஆகிய 14 கூட்டாளர் நாடுகளை உள்ளடக்கியுள்ளது. இது பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு நெகிழ்திறன், நிலையான மற்றும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவதில் ஒத்துழைக்க ஒரு தளத்தை வழங்குகிறது. மேலும் பிராந்தியத்தில் ஒத்துழைப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கு பங்களிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வர்த்தகம், விநியோகச் சங்கிலி, தூய்மையான பொருளாதாரம், நியாயமான பொருளாதாரம் ஆகிய நான்கு தூண்களை இது  உள்ளடக்கியுள்ளது.

ஐபிஇஎஃப் பிராந்தியத்தின் சிறந்த முதலீட்டாளர்கள், தொண்டு நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், புதுமையான நிறுவனங்கள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோரை ஒன்றிணைக்கிறது. நிலையான உள்கட்டமைப்பு, பருவநிலை தொழில்நுட்பம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் முதலீடுகளை திரட்டுவதை இந்த அமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.

தூய்மையான பொருளாதாரத் துறையில் இந்தியாவின் தலைமை நிலையின் காரணமாக, இரண்டு தடங்களில் இந்தியத் தொழில்துறையினருக்கு வாய்ப்பளிக்கும். இது உறுப்பு நாடுகளிடையே சிறந்த பருவநிலை தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்களை அங்கீகரித்து அவற்றை உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியாவில் உள்ள பருவநிலை தொழில்நுட்ப தொழில்முனைவோர் மற்றும் நிறுவனங்கள் இதில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி   ஏப்ரல் மாதம் 26ம் தேதியாகும்.  விண்ணப்பங்கள் பிராந்திய மற்றும் தொழில் வல்லுநர்களால் மதிப்பீடு செய்யப்படும். முதல் 100 நிறுவனங்கள் மே மாதத் தொடக்கத்தில் அறிவிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்கள்  ஜூன் 5 – 6 ஆகிய தேதிகளில் சிங்கப்பூரில் நடைபெறும் முதலீட்டாளர் மன்றத்தில் காட்சிப்படுத்த அழைக்கப்படும்.

திவாஹர்

Leave a Reply