பிரிட்டிஷ் அண்டார்டிக் சர்வேயுடன் இணைந்து, டாக்டர் பாபுலா ஜெனா மற்றும் துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தின் சகாக்கள் தலைமையிலான சமீபத்திய ஆய்வு, 2023-ம் ஆண்டில் வருடாந்தர பனி அதிகரிப்புக்கு முன்னதாக அண்டார்டிக் பனி விரிவாக்கம் மற்றும் பனி பின்வாங்கலில் முன்னெப்போதும் இல்லாத தடங்கல்கள் ஏற்பட்டிருக்கும் நிலைமையை அறிவித்துள்ளது.
புவி வெப்பமடைதலின் பின்னணியில், கடந்த தசாப்தத்தில் ஆர்க்டிக் கடல், பனியின் குறிப்பிடத்தக்க இழப்பைக் கண்டுள்ளது. அதே நேரத்தில் அண்டார்டிக் 2015 வரை மிதமான அதிகரிப்பைக் கண்டது. ஆனால் 2016 முதல் திடீரெனக் குறைந்து காணப்பட்டது. குறிப்பாக, 2016 முதல் 2023 வரை ஒவ்வொரு கோடையிலும் அண்டார்டிக் மிகக் குறைந்த கடல் பனி நிலைமைகளைக் கண்டது, 2023 இல் முன்னெப்போதும் இல்லாத வகையில், மெதுவான பனி விரிவாக்கம் அல்லது பின்வாங்கல் ஏற்பட்டது. அண்டார்டிகாவில் வருடாந்திர அதிகபட்சத்திற்கு முன்னதாக மெதுவான பனி விரிவாக்கம் 2023, செப்டம்பர் 7 அன்று 16.98 மில்லியன் சதுர கிமீட்டரில் பனி அளவு இருந்தது. இது நீண்ட கால சராசரியை விட 1.46 மில்லியன் சதுர கிமீ குறைவானது. கடல் பனிக்கட்டி மாற்றங்களின் அடிப்படைக் காரணம் விஞ்ஞான சமூகத்திற்கும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் ஒரு முக்கியமான கேள்வியாக இருந்தது.
2023 ஆம் ஆண்டில் பனி விரிவாக்கத்தைக் குறைக்க அதிகப்படியான கடல் வெப்பம் பங்களித்தது என்று கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன, ஆனால் வளிமண்டல சுழற்சி மாற்றங்கள் கணிசமானவை மற்றும் முக்கிய பங்கு வகித்தன.
மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையம், துருவ மற்றும் பெருங்கடல் அறிவியலில் நாட்டின் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு பொறுப்பான இந்தியாவின் முதன்மையான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமாகும்.
எஸ்.சதிஸ் சர்மா