மக்களவைத் தேர்தல் 2024-ன் 3-வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் 12 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் 1351 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மத்தியப் பிரதேசத்தின் பேட்டுல் (எஸ்டி) தொகுதியில் ஒத்திவைக்கப்பட்ட தேர்தலில் போட்டியிடும் 8 வேட்பாளர்களும் இதில் அடங்குவர். மேலும் குஜராத்தின் சூரத் தொகுதியில் ஒரு வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த 12 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் வேட்பு மனுக்களைத் திரும்ப பெற 2024, ஏப்ரல் 22 கடைசி தேதியாக இருந்தது.
பேட்டுல் தொகுதி உட்பட மொத்தம் 2963 வேட்பு மனுக்கள் தாக்கல செய்யப்பட்டு இருந்தன. பரிசீலனைக்குப் பின் 1563 வேட்பு மனுக்கள் செல்லத்தக்கவையாக அறிவிக்கப்பட்டன.
மூன்றாம் கட்டத் தேர்தலில் குஜராத்தின் 26 தொகுதிகளில் அதிகபட்சமாக 658 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து மஹாராஷ்டிராவின் 11 தொகுதிகளின் 519 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
2024 மக்களவைத் தேர்தலில் 3-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளின் வேட்பாளர்கள் விவரம்- மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களின் வாரியாக:
மாநிலங்கள்/யூனியன் பிரதேங்கள் | 3-ம் கட்டத்தேர்தலில் தொகுதிகள் | பெறப்பட்ட வேட்பு மனுக்கள் | பரிசீலனைக்குப் பின் செல்லத்தக்கவை | திரும்ப பெறப்பட்ட பின் இறுதியாக போட்டியிடும் வேட்பாளர்கள் |
அசாம் | 4 | 126 | 52 | 47 |
பீகார் | 5 | 141 | 54 | 54 |
சத்தீஷ்கர் | 7 | 319 | 187 | 168 |
தாத்ரா, நாகர்ஹவேலி, டையு-டாமன் | 2 | 28 | 13 | 12 |
கோவா | 2 | 33 | 16 | 16 |
குஜராத் | 26 | 658 | 328 | 266 |
ஜம்மு காஷ்மீர் | 1 | 28 | 21 | 20 |
கர்நாடகா | 14 | 503 | 272 | 227 |
மத்தியபிரதேசம் | 9 | 236 | 140 | 127 |
மஹாராஷ்டிரா | 11 | 519 | 317 | 258 |
உத்தரப்பிரதேசம் | 10 | 271 | 104 | 100 |
மேற்கு வங்கம் | 4 | 101 | 59 | 57 |
மொத்தம் | 95 | 2963 | 1563 | 1352 |
திவாஹர்