10 ஜிகா வாட் திறன் கொண்ட மேம்பட்ட வேதியியல் செல் உற்பத்தி வசதிகளை அமைப்பதற்கான ஏலதாரர்களைத் தேர்ந்தெடுக்க உலகளாவிய டெண்டர் மூலம் கனரகத் தொழில்கள் அமைச்சகம் ஏழு ஏலங்களைப் பெற்றுள்ளது.

2024, ஜனவரி 24 அன்று அறிவிக்கப்பட்ட உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை கொண்ட 10 ஜிகா வாட் மேம்பட்ட வேதியியல் செல் உற்பத்திக்கு மறு ஏலம் எடுப்பதற்கான உலகளாவிய டெண்டரின் மூலம் ஏழு ஏலதாரர்களிடமிருந்து கனரகத் தொழில்கள் அமைச்சகம் ஏலங்களைப் பெற்றுள்ளது. ஏலத்திற்கு முந்தைய கூட்டம் 2024, பிப்ரவரி 12 அன்று நடைபெற்றது. சிபிபி போர்ட்டலில் விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசி தேதி 2024, ஏப்ரல்  22 –ஆக இருந்தது. தொழில்நுட்ப ஏலங்கள் 2024, ஏப்ரல்  23 அன்று திறக்கப்பட்டன.

70 ஜிகா வாட் ஒட்டுமொத்த திறனுக்கான இந்த டெண்டருக்கு ஏலங்களை சமர்ப்பித்த ஏலதாரர்களின் பட்டியல் (அகர வரிசையில்) ஏசிஎம்இ கிளீன்டெக் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், அமர ராஜா அட்வான்ஸ்டு செல் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட், அன்வி பவர் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட், ஜேஎஸ்டபிள்யு நியோ எனர்ஜி லிமிடெட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், லூகாஸ் டிவிஎஸ் லிமிடெட், வாரி எனர்ஜிஸ் லிமிடெட்.

மத்திய கனரகத் தொழில்கள் அமைச்சகம் ரூ.3,620 கோடி பட்ஜெட் செலவில் 10 ஜிகா வாட் மேம்பட்ட வேதியியல் செல் உற்பத்தித் திட்டத்தை அமைப்பதற்கான முன்மொழிவுக் கோரிக்கையை 2024, ஜனவரி 24 அன்று வெளியிட்டது.

எம்.பிரபாகரன்

Leave a Reply