மகாரத்னா மத்திய பொதுத்துறை நிறுவனமும், மின்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள முன்னணி வங்கிசாரா நிதி நிறுவனமான ஊரக மின்மயமாக்கல் கழகம், செனாப் வேலி பவர் பிராஜக்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அதன்படி ஊரக மின்மயமாக்கல் கழகம், செனாப் வேலி பவர் பிராஜக்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ.1,869.265 கோடியை காலமுறை கடனாக வழங்குகிறது. இந்தக் கடன் ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தில் செனாப் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட உள்ள 4×156 மெகாவாட் கிரு நீர்மின் திட்டத்தின் மேம்பாடு, கட்டுமானம் மற்றும் செயல்பாட்டுக்காக பயன்படுத்தப்படும்.
624 மெகாவாட் கிரு நீர்மின் திட்டம் என்பது 135 மீட்டர் உயரத்திற்கு அணை மற்றும் தலா 156 மெகாவாட் திறன் கொண்ட 4 அலகுகளுடன் நிலத்தடி மின் சேமிப்பு நிலையம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
எஸ்.சதிஸ் சர்மா