மத்திய நேரடி வரிகள் வாரியம் படிவம் 10ஏ/10ஏபி-யை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை 2024, ஜூன் 30 வரை நீட்டித்துள்ளது .

 மத்திய நேரடி வரிகள் வாரியம் 25.04.2024 அன்று வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, படிவம் 10ஏ/10ஏபி-யை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை 2024, ஜூன் 30 வரை நீட்டித்துள்ளது.

கடைசியாக நீட்டிக்கப்பட்ட தேதியான 30.09.2023-க்கு அப்பால் இதுபோன்ற படிவங்களை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மேலும் நீட்டிக்கக் கோரி மத்திய நேரடி வரிகள் வாரியத்தால் பெறப்பட்ட பிரதிநிதித்துவங்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது..

திவாஹர்

Leave a Reply