உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சின்னம் ஏற்றும் யூனிட்களை கையாள்வதற்கும், சேமித்து வைக்கவும் வகை செய்யும் அறிவுறுத்தலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது .

2023-ஆம் ஆண்டின் ரிட் மனு (சிவில்) எண் 434-ல் 2024 ஏப்ரல் 26 தேதியிட்ட இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, சின்னங்களை பதிவேற்றும் அலகுகளைக் கையாளுதல் மற்றும் சேமிப்பதற்கான புதிய நெறிமுறையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.  இந்த அலகுகளைக் கையாள்வதற்கும், சேமிப்பதற்கும் புதிய நெறிமுறைகளை அமல்படுத்துவதற்குத் தேவையான உள்கட்டமைப்பு மற்றும் ஏற்பாடுகளை உருவாக்குமாறு அனைத்து தலைமைத் தேர்தல் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் ஆணைப்படி, 01.05.2024 அன்று அல்லது அதற்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களில் சின்னங்களை ஏற்றும் செயல்முறை நிறைவடையும் அனைத்து நிகழ்வுகளுக்கும் திருத்தப்பட்ட நெறிமுறைகள் பொருந்தும்.

திவாஹர்

Leave a Reply