தேர்தல் ஆணையத்தின் 07.05.2024 தேதியிட்ட இரண்டு செய்திக் குறிப்பு மற்றும் 08.05.2024 தேதியிட்ட செய்திக் குறிப்பு ஆகியவற்றின் தொடர்ச்சியாக, நடப்பு 2024 பொதுத் தேர்தலில் 93 தொகுதிகளில் நடந்த மூன்றாம் கட்ட தேர்தலில் 65.68% வாக்குகள் பதிவாகியுள்ளன.
மூன்றாம் கட்ட தேர்தலில் ஆண் வாக்காளர்கள் 66.89 சதவீதத்தினரும், பெண் வாக்காளர்கள் 64.41 சதவீதத்தினரும், மூன்றாம் பாலினத்தவர்களில் 25.2 சதவீதத்தினரும் வாக்களித்துள்ளனர்.
3 ஆம் கட்டத்திற்கான மாநில வாரியாகவும், தொகுதி வாரியாகவும் வாக்குப்பதிவு விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பீகாரில் இரண்டு வாக்குச்சாவடிகளிலும், மத்திய பிரதேசத்தில் நான்கு வாக்குச்சாவடிகளிலும் மூன்றாம் கட்டத் தேர்தலின் மறுவாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதி வாரியான தரவுகளும் வாக்காளர் தரவு (voter turnout) செயலியில் கிடைக்கின்றன. ஒரு தொகுதியில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் படிவம் 17சி நகல் வேட்பாளர்களுக்கு அவர்களின் வாக்குச்சாவடி முகவர்கள் மூலம் வழங்கப்படுகிறது. படிவம் 17 சி இன் உண்மையான தரவு ஏற்கனவே வேட்பாளர்களுடன் பகிரப்பட்டுள்ளது. தபால் வாக்கு எண்ணிக்கை மற்றும் மொத்த வாக்கு எண்ணிக்கையுடன் சேர்த்து வாக்கு எண்ணிக்கைக்கு பின்னரே இறுதி எண்ணிக்கை நடைபெறும். அஞ்சல் வாக்குச்சீட்டுகளில் சேவை வாக்காளர்கள், வருகை தராத வாக்காளர்கள் (85+, மாற்றுத்திறனாளிகள், அத்தியாவசிய சேவைகள் போன்றவை) மற்றும் தேர்தல் கடமையில் உள்ள வாக்காளர்களுக்கு வழங்கப்படும் தபால் வாக்குகள் அடங்கும். சட்டப்படி பெறப்பட்ட தபால் வாக்குகளின் கணக்கு அனைத்து வேட்பாளர்களுக்கும் வழங்கப்படும்.
கூடுதலாக, மே 13, 2024 அன்று 4 ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கு செல்லும் 96 தொகுதிகளில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் விவரங்களும் அளிக்கப்பட்டுள்ளன.
திவாஹர்