நாசிக் சாலை முகாமில் உள்ள பீரங்கிப் படை மையத்தில் சிறார்கள் விளையாட்டுப் பிரிவில் டேக்வாண்டோ விளையாட்டில் சிறந்த சிறார்களை சேர்ப்பதற்கான அகில இந்திய திறந்த நிலைத் தேர்வு 2024 மே 17 முதல் 19 வரை நடைபெறுகிறது.
இந்தத் தேர்வுக்கான வயது 2024, மே 17 நிலவரப்படி 8 வயதுக்கும் 14 வயதுக்கும் இடைப்பட்டதாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 2008 மே 17-க்கும், 2014 மே 17-க்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.
தேர்வுகால வயது | வயது | உயரம்(செமீ) | எடை |
08-14 வயது | 08 | 134 | 29 |
09 | 139 | 31 | |
10 | 143 | 34 | |
11 | 150 | 37 | |
12 | 153 | 40 | |
13 | 155 | 42 | |
14 | 160 | 47 |
உடல் தகுதியைப் பொருத்தவரை பொதுவாக வேறுபாடு அனுமதிக்கப்படுவதில்லை. இருப்பினும், தேசிய மற்றும் சர்வதேச சான்றிதழ் அல்லது பதக்கங்கள் பெற்ற திறமையான சிறார்களுக்கு உயரம் மற்றும் எடைப் பிரிவில் விதிவிலக்கு அளிக்கப்படும்.
மருத்துவத் தகுதி: மருத்துவ அதிகாரி மற்றும் ராணுவ விளையாட்டு மருத்துவ மைய சிறப்பு அதிகாரியால் உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
உடலின் எந்தப் பகுதியிலும் நிரந்தரமாக பச்சைக் குத்தியிருக்கும் விண்ணப்பதாரர்கள் எவரும் தெரிவு செய்யப்பட மாட்டார்கள்.
தேர்வு நேரத்தில் வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள்
பிறப்பு, சாதி, கல்வி, மதிப்பெண் பட்டியல், நடத்தை, இருப்பிடம், விளையாட்டுப் பங்கேற்பு, ஆதார் ஆகியவற்றின் மூலச்சான்றுகள், அண்மையில் எடுக்கப்பட்ட 6 வண்ணப்புகைப்படங்கள்.
குறிப்பு: மூலச்சான்று காண்பிக்கப்படுவதோடு இவற்றின் நகல்கள் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
எம்.பிரபாகரன்