2024 ஏப்ரல் மாதத்திற்கான இந்தியாவின் மொத்த விலை குறியீட்டு எண்கள் வெளியீடு (அடிப்படை ஆண்டு:2011-12).

அகில இந்திய மொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையில் 2024 ஏப்ரல் மாதத்தின் (ஏப்ரல், 2023-ஐ விட) வருடாந்தர பணவீக்க விகிதம் 1.26% ஆக உள்ளது (தற்காலிகமானது). 2024 ஏப்ரல் மாதத்தில் முதன்மையான உணவுப் பொருட்கள், மின்சாரம், கச்சா பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, இயந்திரங்கள், உபகரணங்கள் மற்றும் பிற உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு,  பணவீக்கத்தின் நேர்மறையான விகிதத்திற்குக் காரணமாகும்.

மாத அடிப்படையிலான மாற்றத்தைப் பொருத்தவரை 2024 மார்ச்சுடன்  ஒப்பிடும்போது 2024 ஏப்ரல் மாதத்திற்கான வருடாந்தர பணவீக்க விகிதம் 0.79% ஆக இருந்தது.

2024 பிப்ரவரி மாதத்திற்கான இறுதிக் குறியீடு (அடிப்படை ஆண்டு: 2011-12=100): 2024 பிப்ரவரி மாதத்திற்கான இறுதி மொத்த விலைக் குறியீடு மற்றும் ‘அனைத்துப் பொருட்களின்’ பணவீக்க விகிதம் (அடிப்படை: 2011-12=100) முறையே 151.2% மற்றும் 0.20% ஆக இருந்தது.

2024 பிப்ரவரி இறுதி எண்ணிக்கை 95.5 சதவீதத்தை அடிப்படையாகக் கொண்டது. மொத்த விலைக் குறியீட்டெண் குறித்த தற்காலிக புள்ளி விவரங்கள், இறுதி திருத்தக் கொள்கையின்படி திருத்தியமைக்கப்படும். மேலும் விவரங்களை http://eaindustry.nic.in. என்ற இணையதளத்தில் காணலாம். 

அடுத்த செய்தி வெளியீட்டு தேதி: 2024 மே மாதத்திற்கான மொத்த விலைக் குறியீட்டு எண் ஜூன் 14 2024 அன்று வெளியிடப்படும்.

குறிப்பு: இந்தியாவில் மொத்த விலைக் குறியீட்டு எண்ணினை ஒவ்வொரு மாதமும் 14 ஆம் தேதி (அல்லது அடுத்த வேலை நாள்) குறிப்பு மாதத்தின் இரண்டு வார கால இடைவெளியுடன் டிபிஐஐடி வெளியிடுகிறது. குறியீட்டு எண் நிறுவன ஆதாரங்கள் மற்றும் நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட உற்பத்தி அலகுகளிலிருந்து பெறப்பட்ட தரவுகளுடன் தொகுக்கப்படுகிறது.

எம்.பிரபாகரன்

Leave a Reply