மும்பை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் 4-வது தொழில்நுட்ப புத்தாக்க பயிலரங்கு.

மும்பை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் இணைய நேரடி ஒருங்கிணைப்பு அமைப்புகளில் 4-வதுதொழில்நுட்ப புத்தாக்க பயிலரங்கு மே 13-ந் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது ஆண்டுக்கு இருமுறை நடைபெறும் பயிலரங்காகும். இதில் 25 தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையங்கள் ஒவ்வொன்றும் முன்னேற்றம் மற்றும் சாதனைகளை விளக்குகின்றன.

அரசு, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், கல்வியாளர்கள், தொழில்துறை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைவரும், கலந்துரையாடவும், கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும், இணைய – நேரடி ஒருங்கிணைப்பு அமைப்புகள் களத்தில் அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சியைக் காணவும் இது ஒரு தளமாக உள்ளது.

தொடக்க விழாவில் பேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் செயலாளர் பேராசிரியர் அபய் கரண்டிகர், “இணைய – நேரடி ஒருங்கிணைப்பு அமைப்புகள் பெருகிய முறையில் பரவலான டிஜிட்டல் உலகில் மேலும் மேலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. மேலும் எதிர்காலத்தில் நமது பொருளாதாரத்தின்அனைத்து துறைகளையும் இது இயக்கும்” என்று கூறினார். “25 தொழில்நுட்ப புத்தாக்க மையங்கள் தனித்துவமான முயற்சிகள் மூலம் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குகின்றன” என்று அவர் மேலும் எடுத்துரைத்தார்.

தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையங்கள் முதன்மையான கல்வி நிறுவன வளாகங்களுக்குள் அமைந்துள்ளன. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு ஒரு நெகிழ்வான சூழலை வழங்கும் இந்த மையங்கள் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் மொழிபெயர்ப்பை மேம்படுத்துதல், மனிதவளம் மற்றும் திறன் மேம்பாட்டை ஊக்குவித்தல், தொழில்முனைவோர் மற்றும் ஸ்டார்ட்-அப்களை ஊக்குவித்தல், இணைய நேரடி ஒருங்கிணைப்பு அமைப்புகளில் சர்வதேச கூட்டு ஆராய்ச்சி முயற்சிகளுக்கு உதவுதல் ஆகியவற்றிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட ஒரு தொகுப்பில் சில மையங்களின் நட்சத்திர தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப் பட்டன.

இரண்டு நாள் பயிலரங்கில் இந்த மையங்களின் வெற்றிக் கதைகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

திவாஹர்

Leave a Reply