இந்திய விமானப்படை குடும்ப நலச் சங்கத் தலைவர், உமீத் நிகேதன் என்ற சிறப்புக் குழந்தைகள் சிகிச்சை மையத்தைத் தொடங்கி வைத்தார்.

விமானப்படை குடும்ப நலச் சங்கத்தின் தலைவர் திருமதி நீதா சௌத்ரி நேற்று (17 மே 24) அன்று விமானப்படை பாலம் விமானப்படை தளத்தில் சிறப்புத் தேவைகளைக் கொண்ட குழந்தைகளுக்கான மேம்பட்ட சிகிச்சை மையமான உமீத் நிகேதனைத் திறந்து வைத்தார்.

சிறப்புத் தேவைகளைக் கொண்ட குழந்தைகளின் தனித்துவமான திறன்களுக்கு ஏற்ப பொழுதுபோக்கு நடவடிக்கைகள் மூலம் வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்துவது மற்றும் சிறந்த வளர்ப்பு சூழலை உருவாக்க உமீத் நிகேதன் உருவாக்கப்பட்டுள்ளது. அவர்களின் உணர்வுகளை ஆய்வு செய்தல், பேச்சு சிகிச்சை, விளையாட்டு போன்றவற்றின் மூலம் இந்த மையம் சிறப்புக் குழந்தைகளின் உடல், மன மற்றும் சமூக நல்வாழ்வை மேம்படுத்தும் வகையில் செயல்படும்.  பல்வேறு வகையான திட்டங்களை வழங்குகிறது. உமீத் நிகேதன் 55 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சேவை செய்யும்.

பயிற்சி பெற்ற சிறப்பு கல்வியாளர்கள் குழு இங்கு உள்ளது. இதன் திறப்பு விழாவில் நாடு முழுவதிலுமிருந்து விமானப்படை குடும்ப நலச் சங்கங்களின் அனைத்து மண்டல தலைவர்களும் கலந்து கொண்டனர். விமானப்படை குடும்பங்களின் நலனுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்கான இந்திய விமானப்படையின் உறுதிப்பாட்டை இந்த நிகழ்ச்சி எடுத்துக் காட்டுகிறது.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply