உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக தினத்தை முன்னிட்டு காஸியாபாத்தில் உள்ள கொள்கை ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் பயிற்சிக்கான தேசிய தொலைத்தொடர்பு நிறுவனம், “உலகளாவிய தரநிலைகள் மற்றும் அறிவு சார் சொத்துரிமை” குறித்த பயிலரங்கை நடத்தியது.

உலகளாவிய தர நிலைகள் மற்றும் அறிவுசார் சொத்துரிமை” தொடர்பான ஒரு நாள் பயிலரங்கு, எந்தவொரு நாட்டின் வளர்ச்சிக்கும் தரம் மற்றும் அறிவுசார் சொத்துரிமையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தது. இந்த ஆண்டு (2024) அக்டோபர் 15 முதல் 24-ம் தேதி வரை இந்தியாவால் நடத்த திட்டமிடப்பட்டுள்ள உலக தொலைத்தொடர்பு தரப்படுத்தல் மாநாட்டின் முன்னோட்டமாக இந்த நடைபெற்றது.

சர்வதேச தொலைத்தொடர்பு சங்கத்தின் (ITU) இந்திய பகுதி அலுவலகத்துடன் இணைந்து மத்திய தொலைத்தொடர்புத் துறையின் கீழ் இயங்கும் கொள்கை ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் பயிற்சிக்கான தேசிய தொலைத்தொடர்பு நிறுவனம் (NTIPRIT) நேற்று (2024 மே 17) காஸியாபாத்தில் உள்ள அதன் வளாகத்தில் இந்த பயிலரங்கை நடத்தியது.  உலக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சங்க தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை தொலைத் தொடர்புத் துறை செயலாளர் டாக்டர் நீரஜ் மிட்டல் தொடங்கி வைத்தார்.

தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள், நிபுணர்கள், ஆசிரியர்கள் மற்றும் தில்லியில் உள்ள பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்த பயிலரங்கில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய தொலைத் தொடர்புத் துறைச் செயலாளர் திரு நீரஜ் மிட்டல், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை ஊக்குவிக்க தரப்படுத்தலில் உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம் என்று  வலியுறுத்தினார்.

எதிர்கால தொழில்நுட்பங்களை வடிவமைப்பது, பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவது, டிஜிட்டல் இடைவெளியைக் குறைத்தல், உலகளாவிய சிறந்த செயல்பாடுகளை உறுதி செய்தல், பாதுகாப்பை மேம்படுத்துதல், ஒத்துழைப்பை அதிகரிப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்தப் பயிலரங்கு நடத்தப்பட்டது.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply