தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு 2024, மே 20 அன்று வெளியிட்ட தற்காலிக ஊதியத் தரவின்படி, 2024 மார்ச் மாதத்தில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, 14.41 லட்சம் நிகர உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
2024 மார்ச் மாதத்தில் சுமார் 7.47 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று அத்தரவு சுட்டிக்காட்டுகிறது. இந்தப் புதிய உறுப்பினர்களில் 56.83% பேர் 18 வயது முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பிலிருந்து வெளியேறிய சுமார் 11.80 லட்சம் உறுப்பினர்கள் மீண்டும் அதில் இணைந்துள்ளதாக ஊதியத் தரவு தெரிவிக்கிறது. மார்ச் மாதத்தில் இணைந்த 7.47 லட்சம் புதிய உறுப்பினர்களில் சுமார் 2 லட்சம் பேர் பெண் உறுப்பினர்கள் ஆவார்கள்.
எஸ்.சதிஸ் சர்மா