மின்சாரம் குறித்த வினாடி வினா 2024, அறிவுத்திறன் போட்டி 2024 ஆகியவற்றின் தேசிய அளவிலான இறுதிச் சுற்றினை தேசிய அனல் மின் கழகம் வெற்றிகரமாக நடத்தியது.

கற்றல் பயணத்தை  வளப்படுத்துதல், அறிவுப் பகிர்தல், ஆரோக்கியமான போட்டி ஆகியவற்றில் ஊழியர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் ஈடுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட மின்சாரம் குறித்த வினாடி வினா 2024, அறிவுத்திறன் போட்டி 2024 ஆகியவற்றின் தேசிய அளவிலான இறுதிச் சுற்றினை தேசிய அனல் மின் கழகம் நொய்டாவில் உள்ள மின் நிர்வாகக் கழகத்தில் வெற்றிகரமாக நடத்தியது.

மின்சாரம் குறித்த வினாடி வினா 2024-ல் 570 அணிகளும், அறிவுத்திறன் போட்டி 2024-ல் 1,250 அணிகளும் பங்கேற்றன.

வினாடி வினா 2024-ல் தெலங்கானாவில் உள்ள தேசிய அனல் மின் கழகத்தைச் சேர்ந்த திரு  பிராக்சூத், ராமகுண்டத்தில் உள்ள தேசிய அனல் மின் கழகத்தைச் சேர்ந்த திரு ஹர்மீத் பகா ஆகியோர் வெற்றி பெற்றனர்.

அறிவுத்திறன் போட்டி 2024 மாணவர்கள், ஊழியர்கள், பங்கேற்கும் வகையில் நான்கு பிரிவுகளில் நடத்தப்பட்டது.

இந்த இறுதிப் போட்டி நிகழ்வுகளில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் (மனித வள மேம்பாடு) திரு சி குமார், பொது மேலாளர், (மனித வள மேம்பாடு) திரு வி. ஜெயநாராயணன்,  பொது மேலாளர் (பிஎம்ஐ) திரு எஸ் கே மஜூம்தார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  இரண்டு வினாடி வினா போட்டிகளையும் கிரேசெல்ஸ் நிறுவனத்தின் வினாடி வினா மாஸ்டர் திரு கௌதம் போஸ் நடத்தினார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply