குடியரசுத்தலைவர் மாளிகையில் இன்று (31.05.2024) நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏழு நாடுகளின் தூதர்கள் / ஹைகமிஷனர்கள் தங்களின் நியமனப் பத்திரங்களைக் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவிடம் வழங்கினர். இவற்றை அவர் ஏற்றுக் கொண்டார். நியமனப் பத்திரங்களை வழங்கிய தூதர்கள் / ஹைகமிஷனர்கள் மற்றும் நாடுகளின் விவரம் வருமாறு:
- திரு ஃபெர்னான்டோ சேவியர் புச்சேலி வர்காஸ், ஈக்வடார் குடியரசின் தூதர்
- திருமதி லிண்டி எலிசபெத் காமரூன், பிரிட்டன் ஹைகமிஷனர்
- திரு மேஷல் முஸ்தஃபா அல்ஷெமாலி, குவைத் நாட்டின் தூதர்
- திரு பாட்ரிக் ஜான் ரட்டா, நியூசிலாந்தின் ஹைகமிஷனர்
- திரு அல்சானே கோன்டே, கினியா குடியரசின் தூதர்
- திரு ஜகநாத் சாமி, ஃபிஜி குடியரசின் ஹைகமிஷனர்
- திரு ஸூ ஃபியாங், சீன மக்கள் குடியரசின் தூதர்
எம்.பிரபாகரன்