வாக்காளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் வாக்குப்பதிவை வெற்றிகரமாக்கிய அனைவருக்கும் இந்திய தேர்தல் ஆணையம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது
இந்தியா இன்று வரலாறு படைத்துள்ளது. ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று 2024 பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்றுடன் நிறைவடைந்தது. இந்திய வாக்காளர்கள் 18 வது மக்களவையின் அரசியலமைப்புக்கு வாக்களிக்கும் மிகவும் நேசத்துக்குரிய உரிமையை வழங்கியுள்ளனர். இந்திய ஜனநாயகமும் இந்தியத் தேர்தல்களும் மீண்டும் அற்புதம் நிகழ்த்தியுள்ளன. சாதி, இனம், மதம், சமூக-பொருளாதார, கல்விப் பின்னணி ஆகியவற்றைக் கடந்து மாபெரும் இந்திய வாக்காளர்கள் அதைச் செய்துள்ளனர். உண்மையான வெற்றியாளர் இந்திய வாக்காளர்கள்தான்.
தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் திரு கியானேஷ் குமார், டாக்டர் சுக்பீர் சிங் சந்து மற்றும் தேர்தல் ஆணையத்தின் அலுவலர்கள் தங்களுக்கு இருக்கக்கூடிய பல சவால்கள் மற்றும் சங்கடங்களைத் தாண்டி வாக்குச்சாவடிக்கு வந்ததற்காக, அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி கூறியுள்ளனர். தேர்தல் ஆணையம் தனது நன்றியையும் பாராட்டையும் பதிவு செய்ய விரும்புகிறது. சாதாரண இந்தியருக்கு வாக்களிக்கும் அதிகாரத்தை ஒப்படைத்தபோது, தங்கள் உறுதியான பங்கேற்பின் மூலம், வாக்காளர்கள் இந்திய அரசியலமைப்பின் நிறுவனர்கள் அளித்த நம்பிக்கையை மெய்ப்பித்து, உயர்ந்துள்ளனர். ஜனநாயக நடைமுறையில் பெருமளவில் பங்கேற்பது இந்தியாவின் ஜனநாயக நெறிமுறைகள் மற்றும் உணர்வை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
நாடு முழுவதும் உள்ள வாக்காளர்களுக்கு சுமூகமான, அமைதியான மற்றும் திருவிழா சூழலை வழங்குவதிலும், கடினமான வானிலை, கடினமான நிலப்பரப்புகள் போன்ற தளவாட சவால்களை எதிர்கொள்வதிலும், மாறுபட்ட மக்கள்தொகையில் சட்டம் ஒழுங்கை நிர்வகிப்பதிலும் பாதுகாப்புப் படையினர் உட்பட ஒட்டுமொத்த தேர்தல் இயந்திரத்தின் அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாட்டுக்காக இந்திய தேர்தல் ஆணையம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
இந்தியத் தேர்தலின் முக்கிய அச்சாணியாக இருக்கும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கும் தேர்தல் ஆணையம் நன்றி தெரிவிக்கிறது.
அச்சு, மின்னணு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களின் பங்களிப்புக்கும் ஆணையம் நன்றி தெரிவிக்கிறது. சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான கூட்டாளியாக ஊடகங்களை ஆணைக்குழு எப்போதும் கருதி வந்துள்ளது.
நூற்றாண்டு கண்ட முதியவர்கள், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் அளிக்கும் வாக்குகளின் முக்கியத்துவம் பலருக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கிறது
அவர்கள் ஜனநாயகத்தை முன்னெடுத்துச் செல்வார்கள். இந்தியாவின் அடுத்த தலைமுறை வாக்காளர்கள் இந்தப் பங்களிப்பை இன்னும் உயரத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் விரும்புகிறது.
வாக்குப்பதிவின் போது வாக்காளர்கள், அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், தேர்தல் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் கூட்டு முயற்சிகள் இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்தியுள்ளன, இது பெரும் மரியாதை மற்றும் பாராட்டுதலுக்கு தகுதியானது. மக்களாகிய நாம், கூட்டு முயற்சிகள் காரணமாக ஜனநாயகத்தின் சக்கரங்களை சுழலச் செய்துள்ளோம்.
திவாஹர்