உறுப்பு நாடுகளின் 300 முன்மொழிவுகளின் அடிப்படையில் சர்வதேச சுகாதார விதிமுறைகள் 2005 இல் திருத்தங்களை 77 வது உலக சுகாதாரப் பேரவை ஏற்றுக்கொண்டது.

உலகளாவிய சுகாதார பாதுகாப்பு நிகழ்ச்சி நிரலில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக, 77வது உலக சுகாதாரப் பேரவை  கோவிட் -19 தொற்றுநோய்க்குப் பிறகு உறுப்பு நாடுகளால் செய்யப்பட்ட 300 முன்மொழிவுகளின் அடிப்படையில் சர்வதேச சுகாதார விதிமுறைகளில் (ஐ.எச்.ஆர் 2005) திருத்தங்கள் செய்ய  ஒப்புக்கொண்டது. சர்வதேச சுகாதார விதிமுறைகளில்  இலக்கு வைக்கப்பட்ட திருத்தங்கள், சர்வதேச  பொது சுகாதார அவசரநிலைகள்  மற்றும் தொற்றுநோய் அவசரநிலைகளுக்கு ) தயாராகவும் பதிலளிக்கவும் நாடுகளின் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.  ஐஎச்ஆர் (2005) இன் கீழ் தேவையான முக்கிய திறன்களை உருவாக்குதல், வலுப்படுத்துதல் மற்றும் பராமரிப்பதில் வளரும் நாடுகளை ஆதரிப்பதற்கான நிதி ஆதாரங்களைத் திரட்டுதல் ஆகியவை அவற்றில் அடங்கும்.

சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் செயலாளர் திரு அபூர்வா சந்திரா, “சர்வதேச சுகாதார விதிமுறைகளின் திருத்தத்துடன், நம்பமுடியாத மைல்கல்லை எட்டியுள்ளது” என்று கூறி தனது உற்சாகத்தை வெளிப்படுத்தினார். “இது சமத்துவத்தை நோக்கிய அடுத்த படியாகும், மேலும் எதிர்கால தொற்றுநோய் அச்சுறுத்தல்களிலிருந்து உலகைப் பாதுகாக்க உதவும் ஒற்றுமையின் குடையை உருவாக்குகிறது. இது நமது  குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு ஒரு பரிசு’’ என்று அவர் கூறினார்.

சர்வதேச சுகாதார ஒழுங்குமுறைகள் மீதான பணிக்குழு மற்றும் நாடுகளின் பிரதிநிதித்துவங்களுடனான தொற்றுநோய் ஒப்பந்தம் தொடர்பான அரசுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை அமைப்பு ஆகியவை கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு தனித்தனி குழுக்களாக பேச்சுவார்த்தை செயல்முறையைத் தொடங்கின. மேலும் இந்த விவகாரம் குறித்து பல அமர்வுகள் மீண்டும் தொடங்கப்பட்டன. பல்வேறு பங்குதாரர்களால் எடுக்கப்பட்ட நிலைப்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

பன்னாட்டு மனித உரிமைகளுக்கான திருத்தங்களின் தொகுப்பை இறுதி செய்வதற்காக, 2024 மே 28 அன்று உலக சுகாதார பேரவையின்  குழு ஏ தலைவராக இருந்த திரு அபூர்வா சந்திராவால் வெள்ளை அறிக்கை வடிவில் ஒரு முன்மொழிவு முன்வைக்கப்பட்டது. சர்வதேச சுகாதார ஒழுங்குமுறையில் (2005) முன்மொழியப்பட்ட சில மிக முக்கியமான நிகழ்ச்சி நிரல் அம்சங்கள் தொடர்பான விஷயங்களை பரிசீலிப்பதற்காக, முறையே அரசுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை அமைப்பு மற்றும் சர்வதேச சுகாதார விதிமுறைகளுக்கான திருத்தங்கள்  ஆகியவற்றிலிருந்து ஒரு பணியக உறுப்பினர் இணைத் தலைமையில் ஒரு ஒற்றை வரைவுக் குழுவை நிறுவ முன்மொழிந்தது. இந்த முன்மொழிவுக்கு அனைத்து உறுப்பு நாடுகளும் ஒருமித்த கருத்துடன் ஒப்புதல் அளித்தன.

இவ்வாறு நிறுவப்பட்ட ஒற்றை வரைவுக் குழு, உலக சுகாதார அமைப்பின் செயலகம் மற்றும் உறுப்பு மாநில பிரதிநிதிகளுடன், கடுமையான உழைப்பு மற்றும் உறுதியின் மூலம், 77 வது பேரவை  அமர்வு காலத்தில் நடந்து வரும் ஐ.எச்.ஆர் திருத்தங்களில் ஒருமித்த கருத்தைக் கொண்டுவரும் பணியை முடித்தது.  பொது சுகாதார அவசர நிலைகளுக்கு வளரும் நாடுகள் சமமான பதிலளிப்பதற்குத் தேவையான சமத்துவத்தை செயல்படுத்த முற்படும் ஆவணத்தை வடிவமைப்பதில் இந்தியா ஆக்கப்பூர்வமான பங்கை ஆற்றியது.

இதன் விளைவாக, ஜூன் 1 , 2024 அன்று, ஐஎச்ஆர் (2005) திருத்தத்திற்கான தீர்மானம் 77வது உலக சுகாதார சபையில் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

திவாஹர்

Leave a Reply