இமாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு, காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசத்தின் மாநில, மாவட்ட பொறுப்பு அதிகாரிக்கான ஒருங்கிணைந்த மாதிரி கணக்கெடுப்பு குறித்த பயிலரங்கு மற்றும் பயிற்சி 2024 ஜூன் 6 அன்று லடாக்கின் லே பகுதியில் நடைபெற்றது. இதனை மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையின் ஆலோசகர் (புள்ளியியல்), திரு ஜகத் ஹசாரிகா தொடங்கி வைத்தார்.
மாநில மற்றும் மாவட்ட பொறுப்பு அலுவலர்களுக்கு இ-எல்ஐஎஸ்எஸ் செயலி, முக்கிய புள்ளி விவர இடைவெளிகளை கண்டறிதல், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து முக்கிய கால்நடைப் பொருட்கள் குறித்த விவரங்களை துல்லியமாக தெரிவிப்பதை உறுதி செய்வதற்கான தகுந்த நடவடிக்கைகளை பரிந்துரைத்தலை புதுப்பிப்பது குறித்து அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
திவாஹர்