முப்படை அதிகாரிகளுக்கான பாதுகாப்பு சேவைகள் தொழில்நுட்பப் பணியாளர்கள் படிப்பு புனேயில் உள்ள ராணுவ தொழில்நுட்ப நிறுவனத்தில் 2024, ஜூன் 10 அன்று தொடங்கப்பட்டது. இந்திய ராணுவம், இந்திய கடற்படை, இந்திய விமானப்படை, இந்திய கடலோர காவல்படை மற்றும் நட்பு நாடுகளைச் சேர்ந்த இடைக்கால அதிகாரிகளுக்கு எதிர்கால தொழில்நுட்ப வீரர்கள் மற்றும் ராணுவத் தலைவர்களாக பயிற்சி அளிக்க வடிவமைக்கப்பட்ட இந்த பாடத்திட்டத்தில் இந்திய கடலோர காவல்படை, மற்றும் நட்பு நாடுகளைச் சேர்ந்த ஐந்து அதிகாரிகள் உட்பட மொத்தம் 166 அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
தொடக்க நிகழ்ச்சியின் போது பேசிய ராணுவத் தொழில்நுட்ப நிறுவனத்தின் கமாண்டர், ஏ.வி.எம் விவேக் ப்லௌரியா, இந்தியாவின் ராணுவ மற்றும் பாதுகாப்பு நிலப்பரப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும். வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் புவிசார் அரசியல் பிரச்சினைகள் குறித்து வலுவான புரிதலை உருவாக்க எதிர்கால தொழில்நுட்ப வீரர்களின் அவசியத்தையும் தளபதி எடுத்துரைத்தார்.
இந்த பயிற்சியின் போது, பல்வேறு வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், பாதுகாப்பு உத்திகள், நேரடி மற்றும் உருவகப்படுத்தப்பட்ட பயிற்சிகள், கருத்தரங்குகள், கூட்டுத் திட்டங்கள், தேசிய பாதுகாப்பு உத்தி, அறிவு சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் ராணுவ தொழில்நுட்பங்களில் தற்சார்புக்கான தேசிய முயற்சிகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் புரிதலை மேம்படுத்த அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.
திவாஹர்