மாணவர்களுக்கு ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் தொடங்கப்பட உள்ளது!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

மாணவிகளுக்கு ‘புதுமைப் பெண்’ திட்டம் போல் மாணவர்களுக்கு ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் தொடங்கப்பட உள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் சென்னை உட்பட 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களின் நிலை, புதிய அறிவிப்புகள் தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றுள்ளனர்.

எஸ்.திவ்யா

Leave a Reply