ஆந்திர முதலமைச்சராக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பதவியேற்றுக்கொண்டார். ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம் தலைமையில் ஜனசேனை மற்றும் பாஜக இணைந்து தேர்தலை சந்தித்தனர்.
இந்த தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற தெலுங்கு தேசம் கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது. 135 இடங்களில் தெலுங்கு தேசம் மட்டும் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மை பெற்றது. இதையடுத்து, விஜயவாடா புறநகர் பகுதியின் கண்ணவரத்தில் நடைபெறும் பிரமாண்ட பதவியேற்பு விழாவில், 4வது முறையாக ஆந்திர முதல்வராக இன்று சந்திரபாபு நாயுடு பதவியேற்றார். அவருக்கு கவர்னர் நசீர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். ஆந்திர துணை முதல்வராக பவன் கல்யாண் நியமிக்கப்பட்டுள்ளார்.
–கே.பி.சுகுமார்