பொதுத் தேர்தல்-2024: இந்திய விமானப்படையின் செயல்பாடு.

2024 பொதுத் தேர்தலின் போது இந்திய விமானப்படையின் நடுத்தர லிஃப்ட் ஹெலிகாப்டர்கள் (எம்ஐ-17 வகைகள்), இலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர்கள் (சேட்டாக்ஸ்) மற்றும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்கள் துருவ் ஆகியவற்றின் மூலம் கடந்த சில மாதங்களாக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை விமானம் மூலம் எடுத்துச் செல்வது, தேர்தல் ஆணையத்தின் பணியாளர்களைத் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்துவது போன்ற பணிகளில் இந்திய விமானப்படை தீவிரமாக ஈடுபட்டது. 2024 பொதுத் தேர்தலின் போது, நாட்டின் தொலைதூரப் பகுதிகளிலும், சாலை வழியாகப் போக்குவரத்து பாதுகாப்பு குறைபாடு உள்ள இடங்களிலும் தேர்தல் பணிகளை மேற்கொள்ள இந்திய விமானப்படை முக்கியப் பங்கு வகித்தது.

பொதுத் தேர்தல்-2024-ன் ஏழு கட்டங்களில் ஐந்து கட்டங்களில் இந்திய விமானப்படை முக்கியப் பங்கு வகித்தது. இதற்காக 1750 க்கும் அதிகமான பயணங்களில் 1000 மணி நேரத்திற்கும் அதிகமாகப் பறந்து பணி செய்தது.

எம்.பிரபாகரன்

Leave a Reply