இத்தாலியில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டிற்கு இடையே, பிரதமர் திரு நரேந்திர மோடி உக்ரைன் அதிபர் திரு விளாடிமிர் ஜெலென்ஸ்கியுடன் இன்று (14 ஜூன் 2024) இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்தினார். மூன்றாவது முறையாக பிரதமராகப் பதவியேற்றுள்ள தமக்கு வாழ்த்து தெரிவித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.
இரு தலைவர்களும் நடத்திய பயனுள்ள பேச்சு வார்த்தையின் போது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. உக்ரைன் நிலவரம் குறித்தும், சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள அமைதிக்கான உச்சி மாநாடு குறித்தும் இரு தலைவர்களும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
பேச்சுவார்த்தை மற்றும் ராஜிய ரீதியிலான நடைமுறைகள் மூலம் உக்ரைன் மோதலுக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பதை இந்தியா தொடர்ந்து ஊக்குவித்து வருவதாக பிரதமர் தெரிவித்தார். அமைதித் தீர்வுக்கு தனது சக்திக்குட்பட்ட அனைத்து விஷயங்களையும் இந்தியா தொடர்ந்து செய்யும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி மீண்டும் உறுதியளித்தார்.
இரு தலைவர்களும் தொடர்ந்து தொடர்பில் இருக்க ஒப்புக்கொண்டனர்.
எஸ்.சதிஸ் சர்மா