தனிநபரை அடையாளம் காண்பதற்கான நவீன செயற்கை நுண்ணறிவுக் கருவி திவ்ய திருஷ்டியை பெண் தலைமை தாங்கும் ஸ்டார்ட் அப் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

நடை மற்றும் மூட்டு அசைவு போன்ற உடற்கூறுகளைக் கொண்டு தனிநபரை அடையாளம் காண்பதற்கான நவீன செயற்கை நுண்ணறிவுக் கருவி திவ்ய திருஷ்டியை டாக்டர் சிவானி வர்மா தலைமை தாங்கும் ஸ்டார்ட் அப் நிறுவனம் உருவாக்கியுள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் நடத்தப்பட்ட டேர் டு ட்ரீம் இன்னவேஷன் எனப்படும் புதுமைக்கு கனவு காணும் தைரியம் என்ற  தலைப்பிலான போட்டியில் வெற்றி பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக அங்கீகாரத்துடன் ஒருவரின் நடையையும் பகுப்பாய்வு செய்து திவ்ய திருஷ்டி அடையாளம் காண உதவுகிறது. இதனால் தவறாக அடையாளம் காணுதல், மோசடியாக அடையாளப்படுத்துதல் போன்றவை குறையும். மேலும் இந்த கருவி பாதுகாப்பு, சட்ட அமலாக்கம், பெருநிறுவனங்கள். பொதுத்துறை நிறுவனங்கள் போன்றவற்றுக்கு பயனுடையதாக இருக்கும். இந்த செயற்கை நுண்ணறிவு கருவி பெங்களூருவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பைச் சேர்ந்த செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோ மையத்தின் தொழில்நுட்ப உதவியுடன்  உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சாதனைக்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின்  பணியாளர்களுக்கும், ஸ்டார்ட் அப் நிறுவனத்திற்கும் டிஆர்டிஓ தலைவர் டாக்டர் சமீர் வி காமத் பாராட்டு தெரிவித்துள்ளார். திவ்ய திருஷ்டி என்ற இந்த கருவி, தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியத்தின் மூலம் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் இது பாதுகாப்பு தொழில் துறையின் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply