திருச்சி எஸ்.ஆர்.எம். நட்சத்திர ஹோட்டல் மீது தமிழக சுற்றுலா வளர்ச்சிக்கழகம் நடவடிக்கை எடுக்க முயற்சிப்பது தேவையற்றது.
அதாவது ஹோட்டலுக்கான குத்தகை சம்பந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போது உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசரம் தமிழக அரசுக்கு இல்லை.
குறிப்பாக ஹோட்டலுக்கு கால அவகாசம் வழங்குவது குறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளதால் இது சம்பந்தமான நடவடிக்கைகளில் சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ஈடுபட முனைந்தது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.
காரணம் ஹோட்டலில் தங்கி இருக்கும் வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களுக்கு சிரமத்தையும் மன வேதனையையும் ஏற்படுத்தும்.
இச்சூழலில் தமிழக சுற்றுலா வளர்ச்சிக்கழகம் நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப செயல்பட வேண்டுமே தவிர அரசியல் சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் அணுகக்கூடாது.
எனவே எஸ்.ஆர்.எம். ஹோட்டல் சம்பந்தமாக சுற்றுலா வளர்ச்சிக்கழகம் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதை தமிழக அரசு உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா